குசான-சாசானிய இராச்சியம்

குசான-சாசானிய இராச்சியம் (Kushano-Sasanian Kingdom) (ஆட்சிக் காலம்:கிபி 230 -370) (also called (Kushanshas) குசான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், பாரசீகத்தின் சாசானியர்களின் ஒரு கிளையினர் குசான-சாசானிய இராச்சியத்தை நிறுவி, நடு ஆசியாவின் சோக்தியானா, பாக்திரியா, மெர்வி, பால்க், தற்கால ஆப்கானித்தான் மற்றும் தற்கால பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதிகளை கிபி 230 முதல் கிபி 365 முடிய 140 ஆண்டுகள் ஆண்டனர். குசான-சாசானிய இராச்சிய மன்னர்கள் சொராட்டிரிய நெறி இந்து சமயம் மற்றும் மானி சமயங்களை ஆதரித்தனர். இம்மன்னர்கள் தங்கள் உருவத்துடன், சூலம் ஏந்திய சிவனின் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களையும் வெளியிட்டனர்.

குசான-சாசானிய இராச்சியம்
குஷான்ஷா
கிபி 230–கிபி 370
சாசானியப் பேரரசின் (ஆரஞ்ச் நிறம்) கிழக்கில் உள்ள குசான-சாசானிய இராச்சியத்தின் (ஊதா நிறம்) காபூல், பால்க், ஹெராத் மற்றும் மெர்வி பகுதிகள்[1]
சாசானியப் பேரரசின் (ஆரஞ்ச் நிறம்) கிழக்கில் உள்ள குசான-சாசானிய இராச்சியத்தின் (ஊதா நிறம்) காபூல், பால்க், ஹெராத் மற்றும் மெர்வி பகுதிகள்[1]
தலைநகரம்பால்க்
பேசப்படும் மொழிகள்நடுக்கால பாரசீக மொழி
சமயம்
சொராட்டிரிய நெறி
அரசாங்கம்நிலப்பிரபுத்துவ முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பிந்தைய பாரம்பரியக் காலம்
• தொடக்கம்
கிபி 230
• முடிவு
கிபி 370
முந்தையது
பின்னையது
[[குசான் பேரரசு]]
[[கிடாரைட்டுகள்]]
குசான-சாசானிய ஆட்சியாளர் முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா உருவம் பொறித்த தங்க நாணயம், (ஆட்சிக் காலம்:கிபி 277- 286)

கிமு 225-இல் சாசானியர்களின் ஒரு பிரிவினர், குசான் பேரரரசின் வீழ்ச்சியின் போது, சோக்தியானா, பாக்திரியா மற்றும் காந்தாரப் பகுதிகளை குசானர்களிடமிருந்து கைப்பற்றி அப்பகுதிகளுக்கு ஆளுநர்களை நியமித்தனர். பின்னர் இந்த ஆளுநர்கள், சாசானியப் பேரரசுக்கு அடங்கிய சிற்றரசர்களாக, தங்களை குசானர்களின் மன்னர்கள் ("Kings of the Kushans")[2] என அழைத்துக் கொண்டதுடனர். இவர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் குசான-சாசானிய இராச்சிய மன்னர்களின் வரலாறு ஓரளவு அறிய கிடைக்கிறது.

மூன்றாம் பெரோஸ் குஷான்ஷா ஆட்சியின் போது, கிபி 370-இல் குசான-சாசானிய இராச்சியத்தின் மீது நடு ஆசியாவில் வாழ்ந்த நாடோடி மக்களான கிடாரைட்டுகள் தொடுத்தப் போரில், குசான-சாசானிய இராச்சியத்தின் பெரும்பகுதிகளை கிடாரைட்டுகள் கைப்பற்றினர். எஞ்சிய குசான-சாசானிய இராச்சியத்தின் பகுதிகள் சாசானியப் பேரரசில் இணைக்கப்பட்டது.[3] பின்னர் கிடாரைட்டு மக்களை ஹெப்தலைட்டுகள் வென்றனர்.[4]கிபி 565-இல் சாசானியர்கள், நடு ஆட்சியாவின் துருக்கியகளுடன் இணைந்து ஹெப்தலைட்டு மக்களை விரட்டியடித்தனர். கிபி ஏழாம் நூற்றான்டின் நடுவில் பாரசீகத்தில் இசுலாமின் எழுச்சிக்குப் பின்னர் சாசானிய பேரரசு வீழ்ந்தது.

முக்கிய குசான-சாசானிய ஆட்சியாளர்கள்

தொகு
 
குசான-சாசானிய இராச்சியத்தை நிறுவிய முதலாம் அர்தசீர், ஆட்சிக் காலம் கிபி 230-250, மெர்வி
 
போர்க் குதிரையில் முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா
 
அஜந்தா குகை எண் 1-இன் மேற்கூரையில் மதுக் கோப்பையுடன் சாசானியத் தலைவரின் சித்திரம், கிபி 5-ஆம் நூற்றான்டு[5]
 
தக நாணயத்தின் ஒரு பக்கம் மன்னர் பக்ரம் குசான்ஷாவின் உருவம் (350-365), மறுபுறம் நந்தியுடன் சிவன் உருவம்

படக்காட்சிகள்

தொகு
 
முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா ஆட்சிக் காலத்தில் (265 – 295) ஆப்கனில் வெளியிடப்பட்ட நாணயம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ALRAM, MICHAEL (2014). "From the Sasanians to the Huns New Numismatic Evidence from the Hindu Kush". The Numismatic Chronicle (1966-) 174: 266. பன்னாட்டுத் தர தொடர் எண்:0078-2696. 
  2. The Cambridge Companion to the Age of Attila, Michael Maas, Cambridge University Press, 2014 p.284 ff
  3. Rezakhani 2017, ப. 83.
  4. Sasanian Seals and Sealings, Rika Gyselen, Peeters Publishers, 2007, p.1
  5. The Buddhist Caves at Aurangabad: Transformations in Art and Religion, Pia Brancaccio, BRILL, 2010 p.82
  6. CNG Coins

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு