மெர்வி (Merv) (துருக்மேனியம்: Merw, Мерв, مرو; பாரசீக மொழி: مرو‎, Marv); பின்னர் Alexandria (கிரேக்க மொழி: Ἀλεξάνδρεια) and subsequently Antiochia in Margiana (கிரேக்க மொழி: Ἀντιόχεια ἡ ἐν τῇ Μαργιανῇ) நடு ஆசியாவின் வடக்கு ஈரானில் அமைந்த பண்டைய நகரமும்[1] , யுனெஸ்கோவின் பட்டியலில் உள்ள உலகப் பாரம்பரியக் களகளில் ஒன்றாகும். [2][3]

மெர்வி
Merw (in துருக்குமேனிய மொழி)
பண்டைய மெர்வி நகரத்தின் வான் பரப்புக் காட்சி
மெர்வி is located in மேற்கு மற்றும் நடு ஆசியா
மெர்வி
Shown within West Asia#Turkmenistan
மெர்வி is located in துருக்மெனிஸ்தான்
மெர்வி
மெர்வி (துருக்மெனிஸ்தான்)
மாற்றுப் பெயர்அலெக்சாண்டிரியா
பகுதிநடு ஆசியா
ஆயத்தொலைகள்37°39′46″N 62°11′33″E / 37.66278°N 62.19250°E / 37.66278; 62.19250
வகைபண்டைய நகரம், உலகப் பாரம்பரியக் களம்
வரலாறு
கலாச்சாரம்பாரசீகர்கள், அரேபியர்கள், செல்யூக், மங்கோலியர்கள், துருக்மேனியர்கள்
பகுதிக் குறிப்புகள்
நிலைசிதிலமைந்துள்ள்து.
அதிகாரபூர்வ பெயர்: State Historical and Cultural Park "Ancient Merv"
வகைபண்பாட்டுக் களம்
அளவுகோல்ii, iii
வரையறுப்பு1999 (23-வது அமர்வு)
சுட்டெண்886
நாடுதுர்க்மெனிஸ்தான்
பிரதேசம்ஆசிய-பசிபிக்

இப்பண்டைய நகரம், நடு ஆசியாவின் துர்க்மெனிஸ்தான் நாட்டின் பட்டுப் பாதை அருகே அமைந்துள்ளது. பாரசீகம், பௌத்தம், செல்யூக், மங்கோலியர்கள், துருக்மேனியர்கள் போன்ற பல இன மக்களின் பண்பாட்டு வரலாற்றை இந்நகரம் கொண்டிருந்தது.[4]

கிமு 3,000 முதல் 18-ஆம் நுற்றான்டு வரை இந்நகரம் மக்கள் குடியிருப்பை தொடர்ந்து கொண்டிருந்தது. வரலாற்றில் இந்நகரம் பல பேரரசுகளின் கைகளில் மாறி மாறிச் சென்றது. மெர்வி நகரம், அகாமனிசிய பேரரசின் மார்கியானா மாகாணத்தின் ஒரு மையமாக விளங்கியது. பின்னர் இந்நகரம் கிமு 550 முதல் கிபி 1796 முடிய அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு,கிரேக்க பாக்திரியா பேரரசு, பார்த்தியப் பேரரசு, இந்தோ-கிரேக்கர்கள், குசானப் பேரரசு, சாசானியப் பேரரசு, குசான-சாசானிய இராச்சியம், அரபு கலிபகம், சபாரித்து வம்சம், செல்யூக் பேரரசு, தைமூரிய வம்சம், சபாவித்து வம்சம் மற்றும் அப்சரித்து இராச்சியங்களின் கீழ் இருந்தது. கிபி 1221-இல் மங்கோலியர்கள் மெர்வி நகரத்தை முற்றுகையிட்டு முற்றிலும் அழித்து சிதைத்து, பத்து இலட்சம் மக்களைக் கொன்றனர். 1789-இல் மீண்டும் மறுசீரமைக்கப்பட்ட் மெர்வி நகரத்தை, 1800 முதல் முற்றிலும் கைவிட்டனர்.[5]

குசான-சாசானிய இராச்சிய மன்னர் முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா மெர்வி நகரத்தின் தங்க நாணயச்சாலையில் வெள்ளி மற்றும் தங்க நாணயகளை உருவாக்கி வெளியிட்டார்.


சாசனியப் பேரரசில் பண்டைய மெர்வி நகரம்
பண்டைய மெர்வி நகரத்தில் சிதிலங்கள்


சுல்தான் சஞ்சார் கல்லறை மண்டபம்

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bosworth, Clifford Edmund (January 2007). Historic Cities of the Islamic World. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004153882.
  2. State Historical and Cultural Park “Ancient Merv”
  3. List of World Heritage Sites in Turkmenistan
  4. Merv, ANCIENT CITY, TURKMENISTAN
  5. Merv was razed – and never recovered

ஆதாரங்கள் மற்றும் வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Merv
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்வி&oldid=3361584" இலிருந்து மீள்விக்கப்பட்டது