மார்கியானா

மார்க்கியானா (Margiana) நடு ஆசியாவில் அமைந்த பாலைவனச் சோலை நகரம் ஆகும். இது கிமு 281 முதல் கிபி 651 முடிய அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு மற்றும் சாசானியப் பேரரசுகளின் கீழ் ஒரு மாகாணமாக விளங்கியது. இதன் தலைநகரம் மெர்வி ஆகும். தற்போது மார்க்கியானா பிரதேசம் ஆப்கானித்தான், துருக்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் பரவியுள்ளது. மார்க்கியானாவில் கிமு 1500 முதல் கிமு 500 வரை யாஸ் பண்பாடு நிலவியது.

மார்க்கியானா
மெர்வி
மாகாணம் செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு மற்றும் சாசானியப் பேரரசு
கிமு 281–261–கிபி 651
Location of மார்க்கியானா
Location of மார்க்கியானா
நடு ஆசியாவில் கிமு 300-இல் மார்க்கியானாவின் வரைபடம்
தலைநகரம் மெர்வி
வரலாற்றுக் காலம் பண்டைய வரலாறு
 •  நிறுவப்பட்டது கிமு 281–261
 •  ராசிதீன் கலீபாக்களால் வெல்லப்பட்டது. கிபி 651
தற்காலத்தில் அங்கம்  ஆப்கானித்தான்
 துருக்மெனிஸ்தான்
 உஸ்பெகிஸ்தான்

எல்லைகள் தொகு

மார்க்கியானாவின் தென்மேற்கில் பார்த்தியாவும், தெற்கில் ஆரிய மாகாணமும், கிழக்கில் பாக்திரியாவும், வடக்கில் சோக்தியானாவும் இருந்தது.

 
மார்க்கியானா மன்னர் பிராதாவின் சிலை, கிமு 522[1]

சமயங்கள் தொகு

பட்டுப் பாதையில் அமைந்த மார்க்கியானாவை ராசிதீன் கலிபாக்கள கைப்பற்றுவதற்கு முன் இப்பகுதி மக்கள் சொராட்டிரிய நெறி, பௌத்தம், கிறித்துவம், யூத சமயங்களைப் பயின்றனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

ஆதார நூற்பட்டியல் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கியானா&oldid=3582305" இலிருந்து மீள்விக்கப்பட்டது