பார்த்தியா
பார்த்தியா (Parthia) (ஆட்சிக் காலம்:கிமு 247 முதல் கிபி 224 வரை) என்பது பாரசீகர்களின் பேரரசு ஆகும். பார்த்தியா பேரரசு தற்கால ஈரான் பண்டைய அண்மை கிழக்கு மற்றும் நடு ஆசியாவின் பகுதிகளைக் கொண்டது. பாரசீகர்கள் நிறுவிய பார்த்தியப் பேரரசு தற்கால ஈரானையும், ஆர்மீனியா, ஈராக், ஜியார்ஜியா, கிழக்கு துருக்கி, கிழக்கு சிரியா, அசர்பெய்ஜான், துர்க்மெனிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், குவைத், பாரசீக வளைகுடா, அரேபிய தீபகற்பம், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.
Parthian Empire at its greatest extent, c. 60 BCE. | |
மொழி | பார்த்தியன் மொழி |
---|---|
மதம் | பார்சி |
தலைநகரம் | Ctesiphon, Hecatompylus |
பரப்பு | மத்திய கிழக்கு |
Existed | 238 BCE–228 CE |
பார்த்தியன்கள் சிறந்த வில்லாளிகளாயும் குதிரை வீரர்களாகவும் விளங்கினர். போரில் புறமுதுகிட்டு ஓடுவது போல் நடித்து எதிரிகளின் மீது அம்பு மாரி பொழிவர்.
கி.மு. 250 ஆம் ஆண்டில் பார்த்தியர்கள் பார்த்தியப் பேரரசு அமைப்பதில் வெற்றி பெற்றனர். கி.மு முதலாம் நூற்றாண்டில் அது யூப்ரடீசு மற்றும் சிந்து நதிகளுக்கிடையிலும், மற்றும் ஆமூ தாரியா ஆற்றுக்கிடையிலும் பரந்து விரிந்த பாத்தியப் பேரரசாக வளர்ந்தது.[1][2][3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Parthia, ANCIENT REGION, IRAN
- ↑ [://www.ancient.eu/Parthia_(Empire)/ Parthia (Empire)]
- ↑ The Parthian Empire