இரண்டாம் வேற்றுமை

இரண்டாம் வேற்றுமை என்பது பெயரின் எழுவாய்ப் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்தும் வேற்றுமை ஆகும். இது செயப்படுப்பொருள் வேற்றுமை என்றும் வழங்கப்படும். இரண்டாம் வேற்றுமையின் உருபு 'ஐ' ஆகும்.

இரண்டாம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் தொகு

இரண்டாம் வேற்றுமை உருபான 'ஐ' என்ற உருபை ஏற்றதும் (எழுவாய்) பெயர்ச்சொல்லானது கீழ்க்கண்ட பொருள்களை உணர்த்தும்.

 1. ஆக்கப்படுபொருள் ( ஒன்றை உருவாக்குதல்)
 2. அழிக்கப்படு பொருள் ( ஒன்றை இல்லாமல் செய்தல்)
 3. அடையப்படு பொருள் ( ஒன்றை அடைதல்)
 4. நீக்கப்படு பொருள் (ஒன்றை விட்டு நீங்(க்)குதல்)
 5. ஒத்தல் பொருள். (ஒன்றை மற்றொன்றுடன் ஒப்புமைப் படுத்தல்)
 6. உடைமைப் பொருள்.( உடைமை பெற்றிருத்தல்)

ஆகியனவும் பிறவுமாகும்.

சான்று:

 • குடத்தை வனைந்தான் - ஆக்கப்படுபொருள்.
 • கோட்டையை இடித்தான் - அழிக்கப்படு பொருள்.
 • ஊரை அடைந்தான் - அடையப்படு பொருள்
 • வீட்டை விட்டான் - நீக்கப்படு பொருள்
 • புலியைப் போன்றான் - ஒத்தல் பொருள்
 • பொன்னை உடையான் - உடைமைப் பொருள்.

மேற்கோள் தொகு

 1. நன்னூல், வேற்றுமையியல், நூற்பா 296.

வெளிப் பார்வை தொகு

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_வேற்றுமை&oldid=3455880" இருந்து மீள்விக்கப்பட்டது