இரண்மை சென் குப்தா
இரண்மை சென் குப்தா (Hiranmay Sen Gupta, ஆகத்து 1, 1934 – சனவரி 8, 2022) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் ஆவார். 1934 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். அணு இயற்பியலில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். [1] சுமார் 200 ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டுள்ளார். 1977 ஆம் ஆண்டு முதல் வங்காளதேச அறிவியல் அகாதமியில் உறுப்பினராக உள்ளார். [2]
இரண்மை சென் குப்தா Hiranmay Sen Gupta | |
---|---|
பிறப்பு | 1 ஆகத்து 1934 பரிசால், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 8 சனவரி 2022 டாக்கா, வங்காளதேசம் | (அகவை 87)
தேசியம் | வங்காளதேசியர் |
துறை | அணுக்கரு இயற்பியல் |
பணியிடங்கள் | தாக்கா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | டாக்கா பல்கலைக்கழகம் இலண்டன் பல்கலைக்கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இயோசப் ரோட்பிளாட்டு |
துணைவர் | சுச்சரிதா சென் குப்தா |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகு1963 ஆம் ஆண்டு இரண்மை சென் குப்தா இயோசப் ரோட்பிளாட்டின் மேற்பார்வையில் லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து அணு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். [2]
தொழில்
தொகு1955 ஆம் ஆண்டுக்கும் 2000 ஆம் ஆண்டுக்கும் இடையில் சென் குப்தா டாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். 1973 - 1976 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் அணு இயற்பியல் ஆய்வகத்திலும், 1981-1982 ஆம் ஆண்டுகளில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையிலும் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். 1982-1992 ஆம் ஆண்டுகளில் இத்தாலியில் உள்ள திரைசுட்டே நகரில் இருக்கும் தத்துவார்த்த இயற்பியலுக்கான அப்துசு சலாம் பன்னாட்டு மையத்தில் மூத்த இணைப்பேராசியராக இருந்தார். [2]
விருதுகள்
தொகு- எச்பி ராய் தங்கப் பதக்கம் (1967)
- A. ராப் சவுத்ரி தங்கப் பதக்கம் (1975)
- சோனாலி வங்கி தங்கப் பதக்கம் (1984)
- இப்ராகிம் தங்கப் பதக்கம் (1992) [2]
மறைவு
தொகுஇவர், சனவரி 8, 2022 அன்று தனது 87 வயதில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sen Gupta, H. M. "Microsoft Academic Search". Archived from the original on 2016-05-28. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Sen Gupta, H. M. "Professor H.M. Sen Gupta". Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
- ↑ Nuclear physicist Hiranmay Sen Gupta dies. The Financial Express.