இரத்தன் குமார் நேரு

இந்திய ஆட்சிப்பணியாளர்

இரத்தன்குமார் நேரு (Ratan Kumar Nehru) அல்லது ஆர்.கே. நேரு (1902 அக்டோபர் 10 - 1981 ஏப்ரல் 10) என்றும் அழௌக்கப்படும் இவர் ஓர் இந்திய அரசு ஊழியரும் மற்றும் இராஜதந்திரியுமாவார். இவர், 1952 முதல் 1955 வரை இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக பணியாற்றினார்.

ஆர்.கே. நேரு (வலது) எகிப்திய தலைவர் ஜமால் அப்துல் நாசர் (நடுவில்) மற்றும் ராஜஸ்தானின் அரசப் பிரதிநிதி இரண்டாம் மான் சிங் (இடது)

சுயசரிதைதொகு

இரத்தன்குமார் நேரு 1902 ஆம் ஆண்டில் நேரு குடும்பம் பொதுமக்களுக்கு இன்னும் தெரியாத நேரத்தில் பிறந்தார். குடும்பப்பெயருக்கு சமூக அல்லது அரசியல் அந்தஸ்து ஏதும் அப்போது இல்லை. இருப்பினும், நேருக்கள் உயர் சாதி காஷ்மீரி பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு படித்த, வசதியான மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பமாக இருந்தது. இரத்தன்குமாரின் தந்தை மோகன்லால் நேரு, தற்போதைய ராஜஸ்தானில் உள்ள கேத்ரி மாநிலத்தின் திவானாக இருந்த நந்தலால் நேருவின் மகன் ஆவார். நந்தலாலின் தம்பி மோதிலால் நேரு அப்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு வசதியான வழக்கறிஞராக இருந்தார். எனவே இந்தியாவின் வருங்கால பிரதம மந்திரி மோதிலாலின் மகன் ஜவகர்லால், தனது வயதான மாமா நந்தலால் மீது மட்டுமல்லாமல், இரத்தன்குமாரின் தந்தை அவரது உறவினர் மோகன்லாலுடனும் எப்போதும் வேறுபட்டே இருந்தார். இரத்தன்குமார் நேரு ஜவகர்லால் நேருவின் நெருங்கிய உறவினராவார்

கல்விதொகு

இரத்தன்குமார் மிகவும் மேற்கத்தியமயமாக்கப்பட்ட மற்றும் மிகவும் ஆங்கிலேயச் சூழலில் வளர்ந்தார். இவர் அந்த நேரத்தில் இந்தியாவில் அரிதாக இருந்த ஆங்கிலக் கல்வியைப் பெற்றார். பள்ளிக்கல்வி முடிந்ததும், இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்குத் தயாராவதற்காக இவர் இங்கிலாந்திற்கு பயணம் செய்தார். இது அந்த நாட்களில் உயரடுக்கின் உச்சமாக இருந்தது. இவர் தேர்வில் தேர்ச்சி பெற்று முறையாக ஆட்சிப்பணியில் சேர்ந்தார். இவர் தனது உறவினர் ஜவகர்லால் நேரு இந்திய சுதந்திர இயக்கத்தில் தலைமைப் பாத்திரத்தை வகித்த அனைத்து தசாப்தங்களிலும் காலனித்துவ நிர்வாகத்தின் வரிசையில் தொடர்ந்து உயர்ந்தார்.

இந்திய ஆட்சிப் பணிதொகு

1947 இல் இந்தியா சுதந்திரமானது, ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார். உலகெங்கிலும் உள்ள தூதரகங்களை உருவாக்கி புதிய வெளியுறவுக் கொள்கையை வகுக்க அதிகாரிகள் தேவைப்பட்டனர். ஜவகர்லால் நேரு தனது சொந்தக் குடும்பத்தினரை (அவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட், அவரது உறவினர் பிரஜ் குமார் நேரு மற்றும் அவரது மருமகன் இரத்தன்குமார் நேரு உட்பட) முதலில் நியமித்தார். இந்த செயல்முறைக்கு உதவுவதற்காக, வெளிநாட்டில் (மேற்கில்) தனது அந்தஸ்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் உலக அரங்கில் தனது சொந்த உருவத்தையும் கௌரவத்தையும் மேம்படுத்தும் ஒரு வழியாக இதைக் கருதினார்.

ஜவகர்லால் தனது நெருங்கிய உறவினரான் இரத்த குமார் நேருவிடம் இந்த நோக்கங்களைப் பின்பற்றுவதற்காக பல முக்கியமான பணிகளை ஒப்படைத்தார். இவர் 1950கள் மற்றும் 1960களில் பல நாடுகளுக்கான தூதராக அனுப்பப்பட்டார். 1952 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் ஜவகர்லால் நேரு வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்ற நேரத்தில் (நேரு 1946 முதல் தேர்ந்தெடுக்கப்படாத, பரிந்துரைக்கப்பட்ட பிரதமராக இருந்தார்), தனது உறவினர் இரத்தன்குமார் நேருவை இந்திய வெளியுறவுச் செயலாளராக நியமித்தார் இந்த பதவியை வகித்த இரண்டாவது நபரான இவர், 1955 வரை மூன்று ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். 1955-58 காலப்பகுதியில், இவர் சீனாவிற்கான இந்திய தூதராகவும் [1] 1958-60 காலப்பகுதியில் ஐக்கிய அரபு அமீரகக் குடியரசிலும் தூதராக இருந்தார். [2]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தன்_குமார்_நேரு&oldid=3005647" இருந்து மீள்விக்கப்பட்டது