இரத்னா சிங்

இரத்னா சிங் (Ratna Singh பிறப்பு 29 ஏப்ரல் 1959) ஓர் இந்திய அரசியல்வாதியும், மேனாள் அமைச்சர் தினேஷ் சிங்கின் மகள் ஆவார்.

இராஜ்குமாரி இரத்னா சிங்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996–1998
முன்னையவர்அபய் பிரதாப் சிங்
பின்னவர்ராம் விலாஸ் வேதாந்தி
தொகுதிபிரதாப்கர் மக்களவைத் தொகுதி
பதவியில்
1999–2004
முன்னையவர்ராம் விலாஸ் வேதாந்தி
பின்னவர்அக்சய் பிரதாப் சிங்
தொகுதிபிரதாப்கர் மக்களவைத் தொகுதி
பதவியில்
2009–2014
முன்னையவர்அக்சய் பிரதாப் சிங்
பின்னவர்அரிவன்ஸ் சிங்
தொகுதிபிரதாப்கர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 ஏப்ரல் 1959 (1959-04-29) (அகவை 65)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1995–2019)
பாரதிய ஜனதா கட்சி (2019–தற்போது வரை)
துணைவர்
ஜெய்சிங் சிசோடியா (தி. 1987)
பிள்ளைகள்2
பெற்றோர்தினேஷ் சிங்

1996, 1999, 2009 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரதாப்கர் தொகுதியில் இருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 2019 அக்டோபரில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் 1999 இல் பிரதாப்கர் தொகுதியில் வெற்றி பெற்றார், ஆனால் 2004 தேர்தலில் அக்சய் பிரதாப் சிங் என்ற கோபால்ஜியிடம் தோல்வியடைந்தார்.

இரத்னா சிங் 2009 இந்திய பொதுத் தேர்தலில் பிரதாப்கர் தொகுதியில் வெற்றி பெற்றார். சமாஜ்வாடி கட்சிப் போட்டியாளரான பேராசிரியர் சிவகாந்த் ஓஜாவை 30,000 வாக்குகளில் தோற்கடித்தார்.[2] அக்சய் பிரதாப் சிங் மூன்றாவது இடத்தையும், சிறையில் இருந்து தேர்தலில் போட்டியிட்ட பிரபல குற்றவியல்-அரசியல்வாதி அதீக் அகமது நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் மேனாள் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் சிங்கின் இளைய மகள் ஆவார். இவர் ராஜஸ்தானின் பிரதாப்கரைச் சேர்ந்த ஜெய்சிங் சிசோடியாவை மணந்தார்.[3] இந்த இணையருக்கு புவன்யு சிங் என்ற மகனும், தனுஸ்ரீ குமாரி என்ற மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Big jolt to Congress! Three-time Pratapgarh MP Ratna Singh joins BJP in presence of CM Adityanath". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-15. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27.
  2. "Elections Results: Pratapgarh, Uttar Pradesh". web.archive.org. 2009-05-19. பார்க்கப்பட்ட நாள் 2024-11-26.
  3. "Bombay HC directs court officer to visit 'Maharana Pratap's descendent', report on his health".

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்னா_சிங்&oldid=4149727" இலிருந்து மீள்விக்கப்பட்டது