அத்தீக் அகமது
அத்திக் அகமது (Atiq Ahmed, 10 ஆகத்து 1962 - 15 ஏப்ரல் 2023) என்பவர் ஒரு நிழலுலக தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். [2] [3] இவர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து இந்திய நாடாளுமன்றம் மற்றும் உத்தரப் பிரதேச சட்டமன்றம் ஆகியவற்றின் உறுப்பினராக தேர்ந்தெடுக்ககப்பட்டு பணியாற்றியுள்ளார். [4] அகமது மீது 160க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டிருந்த நிலையில் அங்கிருந்தே பல தேர்தல்களில் போட்டியிட்டார். 2023 மார்ச் நிலவரப்படி, உத்தரப் பிரதேசக் காவல்துறை ₹11,684 கோடி (US$1.5 பில்லியன்) மதிப்புள்ள அகமது மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சொத்துகளைக் கைப்பற்றியது. 2005 ஆம் ஆண்டு தனக்கு அரசியல் போட்டியாளராக உருவெடுத்த ராஜு பாலை 2019 ஆம் ஆண்டு கொலை செய்தது தொடர்பாக இவருக்கு எதிராக சாட்சியமளித்த ஒரு சாட்சியை கடத்தியதற்காக இவர் தண்டிக்கப்பட்டார். [5] சிறையில் இருந்த இவர்கள் 2023 ஏப்ரல் 15 அன்று மருத்துவப் பரிசோதனைக்கு காவலர்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவ படிசோதனைக்கு செல்லும் வழியில் துப்பாக்கிகளுடன் வந்த மூவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். [6] [7] [8]
அத்தீக் அகமது | |
---|---|
மக்களவை உறுப்பினர், நாடாளுமன்றம் | |
பதவியில் 13 மே 2004 – 16 மே 2009 | |
முன்னையவர் | தர்மராஜ் படேல் |
பின்னவர் | கபில் முனி கர்வாரியா |
தொகுதி | புல்பூர் |
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989–2004 | |
முன்னையவர் | கோபால் தாஸ் யாதவ் |
பின்னவர் | ராஜு பால் |
தொகுதி | அலகாபாத் மேற்கு |
உத்தரப் பிரதேச அப்னா தளம் தலைவர் | |
பதவியில் 1999–2003 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா | 10 ஆகத்து 1962
இறப்பு | 15 ஏப்ரல் 2023 அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 60)
Manner of death | படுகொலை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (2021–2023)[1] |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | ஷாயிஸ்தா பர்வீன் (தி. 1996) |
பிள்ளைகள் | 5 |
வேலை |
|
ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅத்திக் அகமது ஒரு ஏழைக் குடும்பத்தில் 1962 இல் பிறந்தார். இவரது தந்தை அலகாபாத்தில் குதிரை வண்டி ஓட்டியாக இருந்தார். [9]
அகமது சாயிசுதா பிரவீனை மணந்தார். [10] இந்த இணையருக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். [11] அகமதுவின் சகோதரர் அஷ்ரஃப் என்கிற காலித் அசிமும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். [12]
அரசியல் வாழ்க்கை
தொகுஅரசியலில் பிரவேசம்
தொகுஅகமது 1989 ஆம் ஆண்டு அலகாபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் அரசியலில் நுழைந்தார். இவர் 1991 மற்றும் 1993 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். பின்னர் 1996 இல் சமாஜ்வாதி கட்சி உறுப்பினராக வெற்றி பெற்றார். [13]
மக்களவை உறுப்பினராக
தொகு1999 இல், இவர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி, அப்னா தளத்தின் (காமராவாடி) தலைவராகி 2002 இல் அலகாபாத் மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 2003 இல் மீண்டும் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். 2004 இல், அகமது புல்பூரின் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு இவர் தன் அலகாபாத் சட்டமன்ற உறிப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். [13] [14]
2007 ஆம் ஆண்டில், ஒரு மதராசாவில் நடந்த கற்பழிப்பு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதால் சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். [9]
அத்திக் அகமது எந்த ஒரு குற்ற வழக்கிலும் அதுவரை தண்டனை பெறாததால், 2009 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார். [15] இருப்பினும், சமாஜ்வாதி கட்சி இவரை 2008 ஆம் ஆண்டில் வெளியேற்றியது மேலும் மாயாவதி இவருக்கு பகுஜன் சமாஜ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டார். [16] பின்னர், இவர் பிரதாப்கரில் அப்னா தளம் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார், தேர்தலில் தோல்வியடைந்தார். [17]
சிறையிலிருந்து போட்டியிடல்
தொகு2012 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் அலகாபாத் (மேற்கு) தொகுதியில் அப்னா தளம் சார்பில் அகமது போட்டியிட்டார். அவர் சிறையில் இருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்தார். [18] அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் இவரது வழக்கை விசாரிப்பதிலிருந்து பத்து நீதிபதிகள் விலகினர். [19] தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை நீதிபதிகளின் விலகலுக்கு அகமதுவின் "பயங்கரவாதம்"தான் காரணம் என்று தெரிவித்தன. [20] [21] பதினொன்றாவது நீதிபதி இவரை தேர்தலுக்கு முன் ஜாமீனில் விடுவித்தார். [19] [20] ஆனால் தேர்தலில் ராஜு பாலின் விதவை மனைவியான பூஜா பால் வெற்றி பெற்றார். [22]
2014 இல், இவர் மீண்டும் சமாஜ்வாடி கட்சியில் சேர்க்கப்பட்டு, ஷ்ரவஸ்தி மக்களவைத் தொகுதிக்கு போட்டியிட்டார். இவர் நான்கில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றார். ஆனால் பாஜகவின் தாதன் மிஸ்ராவிடம் 85,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். [23]
2019 ஆம் ஆண்டு வாரணாசி தொகுதியில் நரேந்திர மோதியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக அகமது போட்டியிட்டார். ஆனால் இவர் 833 வாக்குகள் மட்டுமே பெற்றார். [24]
தேர்தல் வரலாறு
தொகுஅகமது 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [25]
# | துவக்கம் | முடிவு | பதவி | கட்சி |
---|---|---|---|---|
1. | 1989 | 1991 | அலகாபாத் மேற்கு தொகுதி ச.ம.உ (முதல் முறை). | இந்திய |
2. | 1991 | 1993 | அலகாபாத் மேற்கு தொகுதி ச.ம.உ (இரண்டாவது முறை). | சுயேச்சை |
3. | 1993 | 1996 | அலகாபாத் மேற்கு தொகுதி ச.ம.உ (மூன்றாவது முறை). | சுயேச்சை |
4. | 1996 | 2002 | அலகாபாத் மேற்கு தொகுதி ச.ம.உ (4வது முறை). | சமாஜ்வாதி கட்சி |
5. | 2002 | 2004 | அலகாபாத் மேற்கு தொகுதி ச.ம.உ (5வது முறை). | அப்னா தளம் |
6. | 2004 | 2009 | புல்பூரிலிருந்து 14வது மக்களவையில் இந்திய மக்களவை உறுப்பினர் (முதல் முறை). | சமாஜ்வாதி கட்சி |
குற்றவியல் வழக்குகள்
தொகுகுற்றங்களில் ஈடுபடல்
தொகுமுதலில் அகமது தொடருந்துகளில் இருந்து நிலக்கரியை திருடி அதை விற்று பொருளீட்டுபவராக குற்ற உலகில் நுழைந்தார். பின்னாளில் இரயில்வே காயலான் பொருட்களை அரசு ஒப்பந்தப் புள்ளிகள் மூலமாக பெறும் ஒப்பந்ததாரர்களை அச்சுறுத்தும் நிலைக்கு வந்தார். 1979 இல் அலகாபாத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டதே இவரது முதல் குற்றப் பதிவு. உத்தரபிரதேசத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார். [9]
இவரது ஆரம்ப காலங்களில் அலகாபாத்தில் உள்ள பிற மோசமான மாஃபியா நபர்களான சந்த் பாபாவுடன் நெருக்கமாக உறவைப் பேணிவந்தார். 1990 இல் இவரது மிகப்பெரிய போட்டியாளரான ஷௌகத் இலாகி சுட்டுக் கொல்லப் பிறகு, அகமத் மிகவும் ஆற்றல்வாய்ந்தவராக மாறினார். பின்னர் மிரட்டி பணம் பறித்தல், கடத்தல், கொலை ஆகியவற்றுக்கு அறியப்பட்டவரானார். [9]
ராஜு பால் கொலை
தொகு2004 இல், சமாஜ்வாதி கட்சிக்கான புல்பூரில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆவதற்காக, அலகாபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை விட்டு அகமது விலகினார். இவருக்குப் பதிலாக இவரது தம்பி காலித் அசிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜு பாலிடம் தோற்றார். 2005 இல், ராஜு பால் சுட்டுக் கொல்லப்பட்டார், காலித் அசிம் அடுத்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். [9]
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்ட அகமது பின்னர் ஜாமீன் பெற்றார். [26] அகமது சிறைக்குள் இருந்தபோதும் நிழலுலகில் தனது அதிகாரத்தை நிலைநாட்டி வந்தார். [9]
மாநிலத்தில் முதலமைச்சராக மாயாவதி பதவியேற்ற பிறகு, இவருக்கு எதிராக அழுத்தம் ஏற்பட்டது. அதன்பிறகு இவர் சரணடைந்தார். மேலும் 2008 இல் இவர் கைது செய்யப்பட்டார் [9]
பல்கலைக்கழகத் தாக்குதல் வழக்கு
தொகுசாம் ஹிக்கின்போட்டம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின், மோசடியில் ஈடுபட்டு தேர்வெழுதியதால் இரு மாணவர்கள் மீது ஊழியர்கள் நடவடிக்கை எடுத்ததனர். அகமது மற்றும் அவரது கூட்டாளிகளால் அவர்கள் 14 திசம்பர் 2016 அன்று தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழக ஆசிரியர்களையும், ஊழியர்களையும் அகமது அடிக்கும் காணொளி இணையத்தில் பரவியது. மறுநாள் அகமது கைது செய்யப்பட்டார். [27] அலகாபாத் உயர் நீதிமன்றம் 10 பெப்ரவரி 2017 அன்று, அகமது மீதுள்ள குற்றவியல் விவரங்களை வரவழைத்தது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்யும்படி அலகாபாத் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது. பிப்ரவரி 11-ம் தேதி அகமதுவை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு அகமது 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். [28]
உமேஷ் பால் கடத்தல் மற்றும் கொலை
தொகுராஜு பால் கொலை வழக்கில் அகமதுவுக்கு எதிராக சாட்சியம் அளித்த முக்கிய சாட்சியான உமேஷ் பால் கடத்தப்பட்ட வழக்கில் 2019 ஆம் ஆண்டில் அகமது தண்டிக்கப்பட்டார். [5] 24 பிப்ரவரி 2023 அன்று, துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் உமேஷ் பால் கொல்லப்பட்டிருந்தார். [29] இந்த கொலை வழக்கில் அகமது முக்கிய சந்தேக நபராக இருந்தார். [26] [30] [31] உமேஷ் பால் மீது வெடிகுண்டை வீசிய அகமதுவின் சகோதரர் அஷ்ரப், மகன் ஆசாத் மற்றும், வெடிகுண்டை தயாரித்த குட்டு முஸ்லீம் ஆகியோர் ஆகியோர் கூட்டுக் குற்றவாளிகளாக இருந்தனர். [32]
அகமது பிரயாக்ராஜ் நடுவண் சிறையில் இருந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறைக்கு 2019 சூனில் மாற்றப்பட்டார் [33]
படுகொலை
தொகு13 ஏப்ரல் 2023 அன்று, உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அகமதுவின் மகன் ஆசாத், உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையால் (STF) ஜான்சியில் ஒரு காவல்துறை மோதல் கொலையில் கொல்லப்பட்டார். [34] [35]
15 ஏப்ரல் 2023 அன்று, அலகாபாத்தில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கட்டாய மருத்துவப் பரிசோதனைக்காக அகமதுவும், அவரது சகோதரரும் காவல்துறையின் முன்னிலையில் அழைத்துச் செல்லப்பட்டனர். அகமது தன் மகனின் இறுதிச் சடங்குகளின் போது இல்லாதது குறித்து செய்தியாளர்களால் அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் , "நான் அழைத்துச் செல்லப்படவில்லை, அதனால் நான் போகவில்லை." என இந்தியில் பதிலளித்தார். அகமதுவின் சகோதரர் அஷ்ரஃப் "முக்கியமான விஷயம் அந்த குட்டு முஸ்லிம்..." என்ற கூறி முடிப்பதற்குள், [36] அடிக் அகமதுவின் தலையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் அவர் இறந்தார். இந்தத் தாக்குதலில் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டார். இது படம்பிடிக்கப்பட்டு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் சகோதரர்கள் காவல்துறையினரால் சூழப்பட்டிருந்தனர். [37] [38] மூன்று துப்பாகி தாரி குற்றவாளிகளும் ஊடகவியலாளர்கள் போர்வையில் வந்து கொலையை செய்தனர். மேலும் அவர்கள் தப்பிக்க முயலாமல், " ஜெய் ஸ்ரீராம் " என்ற முழக்கத்தை எழுப்பியவாறு சரணடைந்தனர். [39] அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். [40] உத்தரப் பிரதேசக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையைப் பற்றி, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு என ஒரு பெயரை உருவாக்கி, மாநிலத்தில் [அகமது] கும்பலை ஒழிப்பதன் மூலம் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்த விரும்புவதாகக் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்." [41]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former MP Atiq Ahmad, wife Shaista Parveen join Asaduddin Owasi's AIMIM". 7 September 2021 இம் மூலத்தில் இருந்து 16 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230416200957/https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/uttar-pradesh/former-mp-atiq-ahmad-wife-shaista-praveen-join-asaduddin-owasis-aimim/articleshow/86006299.cms?from=mdr.
- ↑ "Atiq Ahmed, brother Ashraf shot dead in Uttar Pradesh". Deccan Herald (in ஆங்கிலம்). 15 April 2023. Archived from the original on 15 April 2023. பார்க்கப்பட்ட நாள் 15 April 2023.
- ↑ "Atiq Ahmed, Politician, Thanks Media, Says 'It's Because of You That...'". News18 (in ஆங்கிலம்). 12 April 2023. Archived from the original on 13 April 2023. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
- ↑ Newsdesk, PGurus (12 April 2023). "Umesh Pal Murder Case: Atiq Ahmad to be Interrogated; his Sister Offers to Surrender in Court". PGurus (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 12 April 2023. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
- ↑ 5.0 5.1 "Former Indian lawmaker, brother fatally shot live on TV". AP NEWS (in ஆங்கிலம்). 16 April 2023. Archived from the original on 16 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 April 2023.
- ↑ "Mafia don-turned-politician Atiq Ahmed gets bail – Indian Express". archive.indianexpress.com. Archived from the original on 13 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 January 2017.
- ↑ "Why is Atiq Ahmed being taken from Sabarmati jail to UP?". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 27 March 2023. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
- ↑ "Gangster Atiq Ahmed's convoy reaches Uttar Pradesh". The Indian Express (in ஆங்கிலம்). 27 March 2023. Archived from the original on 27 March 2023. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 "The Atiq Ahmed story: Accused of murder at 17, 5-time MLA and helpless father in the end". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 17 April 2023. பார்க்கப்பட்ட நாள் 17 April 2023.
- ↑ "160 criminal cases, illegal revenues worth crores: Report card of Atiq Ahmed's family". Archived from the original on 12 March 2023. பார்க்கப்பட்ட நாள் 12 March 2023.
- ↑ "Gangster Atiq Ahmed's two minor sons missing, wife moves court". Archived from the original on 12 March 2023. பார்க்கப்பட்ட நாள் 12 March 2023.
- ↑ "HC rejects bail plea of Ashraf in 2015 double murder case". 5 March 2023. Archived from the original on 12 March 2023. பார்க்கப்பட்ட நாள் 12 March 2023.
- ↑ 13.0 13.1 "From gangster to parliamentarian: Story of Atiq Ahmad's journey". LiveMint (in ஆங்கிலம்). 16 April 2023. Archived from the original on 17 April 2023. பார்க்கப்பட்ட நாள் 17 April 2023.
- ↑ "The Hindu : National : Let CBI probe Raju Pal murder: new government". 16 November 2007. Archived from the original on 16 November 2007. பார்க்கப்பட்ட நாள் 17 April 2023.
- ↑ "Daily Excelsior". Jammu Kashmir Latest News | Tourism | Breaking News J&K (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 24 March 2023. பார்க்கப்பட்ட நாள் 24 March 2023.
- ↑ "Rebels galore in Uttar Pradesh phase-II". 23 April 2009 இம் மூலத்தில் இருந்து 27 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090427165212/http://www.hindu.com/2009/04/23/stories/2009042355531200.htm.
- ↑ "Elections Results: Pratapgarh, Uttar Pradesh". 19 May 2009. Archived from the original on 19 May 2009. பார்க்கப்பட்ட நாள் 26 April 2021.
- ↑ "Atique Ahmed files nomination from jail". Indian Express. 24 January 2012. http://archive.indianexpress.com/news/atique-ahmed-files-nomination-from-jail/903372/.
- ↑ 19.0 19.1 .
- ↑ 20.0 20.1 "Asad encounter: Atique Ahmed, the don in the dust". 2023-04-14. https://economictimes.indiatimes.com/news/india/asad-encounter-atique-ahmed-the-don-in-the-dust/articleshow/99469622.cms?from=mdr.
- ↑ "7 Allahabad HC judges recused from hearing Atiq Ahmad's case over 2 years". 2023-04-19. https://timesofindia.indiatimes.com/city/allahabad/7-hc-judges-recused-from-hearing-atiqs-case-over-2-yrs/articleshow/99600218.cms.
- ↑ "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf.
- ↑ "SHRAWASTI ASSEMBLY ELECTIONS RESULTS 2021". NDTV.
- ↑ "अतिक अहमदनं थेट पंतप्रधान नरेंद्र मोदींविरोधातही लढवली होती निवडणूक; मिळालेली 'इतकी' मतं!". லோக்சத்தா. 2023-04-18. https://www.loksatta.com/desh-videsh/atique-ahmed-lok-sabha-election-2029-against-narendra-modi-from-varanasi-asc-95-3598536/lite/.
- ↑ "Member Profile". Lok Sabha. Archived from the original on 28 September 2022. பார்க்கப்பட்ட நாள் 28 September 2022.
- ↑ 26.0 26.1 "Umesh Pal murder: Atiq Ahmed to be shifted from Gujarat's Sabarmati jail to Prayagraj in 36 hours". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 27 March 2023. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
- ↑ "SP candidate Atiq Ahmed booked; Mayawati takes a swipe at Akhilesh Yadav". 15 December 2016. Archived from the original on 11 August 2021. பார்க்கப்பட்ட நாள் 11 August 2021.
- ↑ "Allahabad HC reserves verdict in SHUATS assault case". Hindustan Times. 18 April 2017. Archived from the original on 11 August 2021. பார்க்கப்பட்ட நாள் 11 August 2021.
- ↑ Now |, Times. "Umesh Pal case: Minutes before murder, shooters seen setting off bomb in new CCTV footage". The Economic Times (in ஆங்கிலம்). Archived from the original on 16 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 April 2023.
- ↑ Salaria, Shikha (26 March 2023). "Atiq Ahmed to be shifted to Prayagraj for 2007 abduction case verdict, UP cops reach Gujarat jail". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
- ↑ "Atiq Ahmed Son Encounter: Mafia Atiq's son Asad was killed in a police encounter". Yugantar Pravah. Archived from the original on 13 April 2023. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
- ↑ "Who is Guddu Muslim whose name was the last thing Atiq, Ashraf uttered?". Hindustan Times. 16 April 2023. Archived from the original on 16 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 April 2023.
- ↑ "Ahmedabad: Asaduddin Owaisi to meet Atique Ahmed in jail". The Times of India. 20 September 2021. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/owaisi-to-meet-atique-ahmed-in-jail/articleshow/86352510.cms.
- ↑ "Atiq Ahmad's son Asad, wanted in Umesh Pal murder case, killed in encounter". Hindustan Times (in ஆங்கிலம்). 13 April 2023. Archived from the original on 13 April 2023. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
- ↑ "Gangster-turned-politician Atiq Ahmed's son Asad, aide killed in encounter by UP Police". The Indian Express (in ஆங்கிலம்). 13 April 2023. Archived from the original on 13 April 2023. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
- ↑ "'Nahi le gaye to nahi gaye' were Atiq's last words". 16 April 2023. https://timesofindia.indiatimes.com/india/nahi-le-gaye-to-nahi-gaye-were-atiqs-last-words/articleshow/99526725.cms?from=mdr.
- ↑ "Atiq Ahmad, his brother Ashraf shot dead in Prayagraj, 4 attackers arrested". Hindustan Times (in ஆங்கிலம்). 15 April 2023. Archived from the original on 15 April 2023. பார்க்கப்பட்ட நாள் 15 April 2023.
- ↑ "'Main baat Guddu Muslim...': Atiq Ahmad, brother shot dead as they were speaking". Hindustan Times. 15 April 2023. Archived from the original on 16 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 April 2023.
- ↑ Kissu, Sagrika (16 April 2023). "'It was over in 30 seconds' – eyewitnesses recall fatal attack on Atiq Ahmed, Ashraf in Prayagraj". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 16 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 April 2023.
- ↑ "Posing as Journos 3 Shooters Kill Atiq, Ashraf Ahmed". News18. Archived from the original on 15 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 April 2023.
- ↑ "From everyday crime to don's murder: Who are Atiq Ahmad's killers". 2023-04-16. https://timesofindia.indiatimes.com/india/from-everyday-crime-to-dons-murder-who-were-atiq-ahmads-killers/articleshow/99534010.cms.