வாரணாசி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

வாரணாசி மக்களவைத் தொகுதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள எண்பது மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளடங்கிய சட்டமன்றத் தொகுதிகள் தொகு

 1. வாராணசி வடக்கு சட்டமன்றத் தொகுதி
 2. வாராணசி தெற்கு சட்டமன்றத் தொகுதி
 3. வாராணசி கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி
 4. ரோஹானியா
 5. சேவாபுரி

2014 மக்களவைத் தேர்தல் தொகு

வாரணாசி மக்களவைத் தொகுதியில் மே 12, 2014 இல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. மே மாதம், 16ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத் தேர்தலில் இந்தியாவின் அதிகம் கவனிக்கப்படும் தொகுதியாகவுள்ளது.

வாக்காளர்கள் தொகு

வாரணாசி தொகுதியில் மொத்தம் சுமார் பதினைந்து லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் இந்துக்கள் 80%; இசுலாமியர் 18%; ஜெயின் மதத்தினர் 1.4%; கிறித்துவர் 0.2%; பிற மதத்தினர் 0.4%. இதில் 3.5 இலட்சம் வாக்குகள் கொண்ட இசுலாமியர்களின் வாக்குகள்தான் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறமுடியும் எனும் நிலை உள்ளது.[1]

வேட்பாளர்கள் தொகு

 1. நரேந்திர மோதி, பாரதிய ஜனதா கட்சி[2]
 2. அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி[3]
 3. அஜய் ராய், இந்திய தேசிய காங்கிரஸ்[4]
 4. கைலாஷ் சௌரசியா, சமாஜ்வாதி கட்சி
 5. விஜய் பிரகாஷ் ஜெய்ஸ்வால், பகுஜன் சமாஜ் கட்சி
 6. ஹீரலால் யாதவ், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
 7. இந்திரா திவாரி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

வாரணாசி மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் தொகு

வாரணாசி மக்களவைத் தொகுதி 2004ஆம் ஆண்டு தவிர, 1991ஆம் ஆண்டிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வசமே இருந்து வருகிறது.

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952[a] ரகுநாத்சிங் [b][5] இந்தியத் தேசிய காங்கிரசு
திரிபுவன் நரைன் சிங்[c][6]
1957 ரகுநாத்சிங்
1962
1967 சத்திய நாராயணன் சிங் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1971 ராஜாராம் சாஸ்திரி இந்தியத் தேசிய காங்கிரசு
1977 சந்திரசேகர் ஜனதா கட்சி
1980 கமலாபதி திரிபாதி இந்தியத் தேசிய காங்கிரசு (இந்திரா)
1984 சியாம்லால் யாதவ் இந்தியத் தேசிய காங்கிரசு
1989 அனில் குமார் சாஸ்திரி ஜனதா தளம்
1991 ஸ்ரீஷ் சந்தர தீட்சிதர் பாரதிய ஜனதா கட்சி
1996 சங்கர் பிரசாத் ஜெய்ஸ்வால்
1998
1999
2004 ராஜேஷ் குமார் மிஸ்ரா இந்தியத் தேசிய காங்கிரசு
2009 முரளி மனோகர் ஜோஷி பாரதிய ஜனதா கட்சி
2014 நரேந்திர மோதி
2019
 1. 2-member seat
 2. Central Banaras District
 3. Banaras East

மேற்கோள்கள் தொகு

 1. http://www.maalaimalar.com/2014/05/11155038/election-polls-will-determine.html பரணிடப்பட்டது 2014-05-11 at the வந்தவழி இயந்திரம் வாரணாசி தொகுதியில் முஸ்லிம்கள் ஓட்டு வெற்றியை தீர்மானிக்கும்?
 2. http://www.puthiyathalaimurai.com/this-week/3064
 3. "வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி".
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-14. Retrieved 2014-05-10.
 5. "1951 India General (1st Lok Sabha) Elections Results". Archived from the original on 2020-07-27. Retrieved 2022-11-09.
 6. "1951 India General (1st Lok Sabha) Elections Results". Archived from the original on 2020-07-27. Retrieved 2022-11-09.