சியாம்லால் யாதவ்
சியாம்லால் யாதவ் (1 மே 1927 - 6 மே 2005) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 8வது மாநிலங்களவையின் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்தியத் தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
சியாம்லால் யாதவ் | |
---|---|
MP, மக்களவை (இந்தியா) | |
பதவியில் 8th Lok Sabha.[1] | |
முன்னையவர் | கமலாபதி திரிபாதி |
பின்னவர் | அனில் குமார் சாசுதிரி |
தொகுதி | வாரணாசி நாடளுமன்ற தொகுதி, உத்திரப் பிரதேசம்[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வாரணாசி, (உத்திரப் பிரதேசம்). |
இறப்பு | 6 மே 2005[2] வாரணாசி, (உத்திரப் பிரதேசம்). | (அகவை 78)
.
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு.[1] |
வாழிடம் | வாரணாசி |
வேலை | வழக்கறிஞர்.[2] |
பின்னணி
தொகுயாதவ் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் பிறந்தார். யாதவின் தொழிலால் வழக்கறிஞராகும். தனது ஆரம்பக் காலத்தில் அரசியல் சாராத பல பதவிகளை வகித்தார். இவர் மாவட்ட கூட்டுறவு மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (வாரணாசி) இயக்குநராகவும், உ.பி. அரிசன நல வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர், உத்தரப்பிரதேச அரசின் இந்தி சமிதி தலைவராகவும் இருந்துள்ளார்.
அரசியல்
தொகுஇந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு சியாம்லால் யாதவ் அரசியலில் நுழைந்தார். தனது அரசியல் வாழ்க்கையில், உத்தரப்பிரதேச சட்டமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பணியாற்றினார். இவர் சட்டமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல இலாகாக்களை வகித்தார்.
காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கம்
தொகுயாதவ் லண்டன் மற்றும் ஐல் ஆஃப் மேனில் நடைபெற்ற 19 (1973) மற்றும் 30வது (1984) காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டிற்கான இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகளுள் ஒருவராக இருந்தார்.
நாடாளுமன்ற மாநாடுகள்
தொகுஇந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் உறுப்பினராக யாதவ், நாடாளுமன்ற மாநாடுகளிலும் பங்கேற்றார். ஹவானா மற்றும் ரோமில் முறையே நடைபெற்ற 68வது (1981) மற்றும் 69வது (1982) மாநாடுகளில் கலந்து கொண்டார்.
வகித்தப் பதவிகள்
தொகு# | இருந்து | க்கு | நிலை |
---|---|---|---|
01 | 1957 | 1962 | உறுப்பினர், உத்தரபிரதேச சட்டமன்றம் |
02 | 1967 | 1968 | உறுப்பினர், உத்தரபிரதேச சட்டமன்றம் |
03 | 1967 | 1968 | சட்ட அமைச்சர், உத்தரபிரதேச சட்டமன்றம் |
04 | 1967 | 1968 | நாடாளுமன்ற விவகார அமைச்சர், உத்தரபிரதேச சட்டமன்றம் |
05 | 1967 | 1968 | உணவு மற்றும் சிவில் வழங்கல் அமைச்சர், உத்தரபிரதேச சட்டமன்றம் |
06 | 1967 | 1968 | கைத்தொழில் அமைச்சர், உத்தரபிரதேச சட்டமன்றம் |
08 | 1970 | 1984 | உறுப்பினர், மாநிலங்களவை |
09 | 1980 | 1984 | மாநிலங்களவையின் துணைத் தலைவர் |
10 | 1984 | 1989 | 8வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் |
12 | 1988 | 1989 | மத்திய வேளாண்மை மற்றும் கூட்டுறவு அமைச்சர் . |
மேலும் காண்க
தொகு- மாநிலங்களவைத் துணைத் தலைவர்கள் பட்டியல்
- 8 வது மக்களவை
- மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்
- இந்தியாவின் அரசியல்
- இந்திய நாடாளுமன்றம்
- இந்திய அரசு
- வாரணாசி (மக்களவைத் தொகுதி)
- காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கம்
- மாநிலங்களவையின் துணைத் தலைவர்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Previous Lok Sabha". Lok Sabha website இம் மூலத்தில் இருந்து 16 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116233330/http://164.100.47.132/LssNew/members/lokprev.aspx. பார்த்த நாள்: Dec 2013.
- ↑ 2.0 2.1 "Obituary in Lok Sabha". IndiaKanoon.org. http://www.indiankanoon.org/doc/1363882/. பார்த்த நாள்: Dec 2013.