இரந்தீர் பிரசாத்து
இரந்தீர் பிரசாத்து (Randhir Prasad) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் பீகாரில் உள்ள கிரீதிக்கு பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும் ஆவார். ஒரு பணக்கார குடும்பத்தின் மூன்று மகன்களில் ஒருவரான இவர் கிரீதிக்கு கல்லூரியில் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1971 ஆம் ஆண்டு முதல் கிரீதிக்கு நகராட்சியின் தலைவராக பணியாற்றினார். பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ஒரிசா உட்பட பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மதுபானக் கடைகளை இவர் வைத்திருந்தார். [1]
கிரீதிக்கில் , பிரசாத் ராபின் ஊடு போன்ற ஒரு நபராகக் காணப்பட்டார், உள்ளூர் சமூகத்திற்கான ஒரு கொடையாளியாக இவர் பெயர் பெற்றார். 1979 ஆம் ஆண்டு தன்பாத் மாவட்டத்தில் 233 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததை அடுத்து, இவரது நற்பெயர் ஊழலால் தடுமாற்றம் கண்டது. இருப்பினும், கிரீதிக்கில் இவரது நற்பெயர் உறுதியாகவே இருந்தது, மேலும் இவர் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் கிரீதிக்கு தொகுதிக்கு காங்கிரசு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார். இவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது அதுவே முதல் முறையாகும். [1]
இரந்தீர் பிரசாத்து மே 16, 1980 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, தனது 35 ஆவது வயதில் ஒரு சலை விபத்தில் இறந்தார் [1] [2] கிரீதிக்கில் தேர்தல் தடை செய்யப்பட்டு 1981 ஆம் ஆண்டில் நடைபெற்றது.. இவரது விதவை மனைவி ஊர்மிளா தேவி அந்த தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எந்த அரசியல் அனுபவமும் இல்லாத தேவி, தற்போதைய இந்திய பொதுவுடமைக் கட்சியின் மூத்த அரசியல்வாதியான சதுரானன் மிசுராவை 55.71% வாக்குகள் பெற்று தோற்கடித்தார்.[1] [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Mishra, S. N., L. M. Prasad, and Kushal Sharma. Tribal Voting Behaviour: A Study of Bihar Tribes. New Delhi: Concept Pub. Co, 1982. pp. 75-76
- ↑ Mishra, S. N., L. M. Prasad, and Kushal Sharma. Tribal Voting Behaviour: A Study of Bihar Tribes. New Delhi: Concept Pub. Co, 1982. p. 71
- ↑ "Partywise Comparison Since 1977 - Giridih Assembly Constituency". பார்க்கப்பட்ட நாள் 27 November 2010.