இரமாகாந்த் யாதவ்

இந்திய அரசியல்வாதி

இரமாகாந்த் யாதவ் (Ramakant Yadav ; பிறப்பு சூலை 1,1957) என்பவர் சமாஜ்வாதி கட்சியினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பூல்பூர் பவாயை சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் ஆசம்கர் மக்களவைத் தொகுதியின் மேனாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.[1]

இரமாகாந்த் யாதவ்v
रमाकांत यादव
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்அருண் குமார் யாதவ்
பதவியில்
1993–1996
முன்னையவர்"இவரே"
பின்னவர்இராம் நரேசு யாதவ்
பதவியில்
1991–1993
முன்னையவர்"இவரே"
பின்னவர்"இவரே"
பதவியில்
1989–1991
முன்னையவர்"இவரே"
பின்னவர்"இவரே"
பதவியில்
1985–1989
முன்னையவர்அப்துல் கலாம்
பின்னவர்"இவரே"
தொகுதிபூல்பூர் பவாயை
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996–1998
முன்னையவர்சந்திரஜித் யாதவ்
பின்னவர்அக்பர் அகமது
பதவியில்
1999–2008
முன்னையவர்அக்பர் அகமது
பின்னவர்அக்பர் அகமது
பதவியில்
2009–2014
முன்னையவர்அக்பர் அகமது
பின்னவர்முலாயம் சிங் யாதவ்
தொகுதிஆசம்கர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1957 (1957-07-01) (அகவை 67)
ஆசம்கர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி
துணைவர்இரஞ்சனா யாதவ்
பிள்ளைகள்2 மகன்கள், 1 மகள்
வாழிடம்ஆசம்கர்
As of 17 செப்டம்பர், 2000
மூலம்: [1]

அரசியல் வாழ்க்கை

தொகு

இரமாகாந்த் யாதவ் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2008-ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[2] சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நாடாளுமன்றத் தேர்தலில் இரமாகாந்த் யாதவுக்கு எதிராகப் போட்டியிட்டு மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது அனைத்து அரசியல் பகுப்பாய்வாளர்களுக்கும் சவாலானதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. "பின்தங்கிய இரட்சகர்" என்ற உருவத்தை இவர் கொண்டிருப்பதால் மக்களுடனான இவரது சிறந்த பிணைப்பு இதற்குக் காரணம்.

இவருக்கு முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி மக்களவை உறுப்பினராக இருந்த உமகாந்த் யாதவ் இவரது சகோதரர் ஆவார். இவரது மகன்களில் ஒருவரான அருண் குமார் யாதவ் உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள பூல்பூர் பவாயை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2019ஆம் ஆண்டில் இவர் காங்கிரசு கட்சி சார்பில் பாதோகி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவமானகரமான தோல்வியை எதிர்கொண்டார். இவருக்கு 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பின்னர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பூல்பூர் பவாயை சட்டமன்றத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

பதவிகள் வகித்தவர்

தொகு
1985-95 உறுப்பினர், உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவை (நான்கு முறை)
1996 11ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
1999 13ஆவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2வது முறையாக)
1999-2004 உறுப்பினர், வர்த்தகக் குழு
2000-2004 உறுப்பினர், ஆலோசனைக் குழு, தொடருந்து அமைச்சகம்
2004 14ஆவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (3வது முறையாக)
2004-2008 உறுப்பினர், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகக் குழு
2008 உறுப்பினர் இல்லாதது 28.1.2008 முதல்
2009 15ஆவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (4வது முறையாக)
31 ஆகஸ்ட் 2009 உறுப்பினர், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகக் குழு
2022 உறுப்பினர், உத்தரப்பிரதேசச் சட்டப்பேரவை

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ramakant Yadav". Indian Government Archive இம் மூலத்தில் இருந்து 13 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181113210351/https://archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=531. 
  2. "Azamgarh(Uttar Pradesh) Lok Sabha Election Results 2014 with Sitting M P and Party Name". www.elections.in. elections.in. பார்க்கப்பட்ட நாள் 19 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமாகாந்த்_யாதவ்&oldid=4082837" இலிருந்து மீள்விக்கப்பட்டது