சந்திரஜித் யாதவ்
சந்திரஜித் யாதவ் (Chandrajit Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினராக உத்தரப் பிரதேசம், அசம்கர் தொகுதியிலிருந்து 1967, 1971 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வெற்றிபெற்றார். ஆனால் 1977-ல் ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராம் நரேசு யாதவிடம் வெற்றி வாய்ப்பினை இழந்தார். இந்திரா காந்தி கட்சியைப் பிளவுபடுத்தியபோது, இவர் 'சோசலிஸ்ட்' குழுவிலிருந்தார். மேலும் 1978ஆம் ஆண்டு அசம்கர் இடைத்தேர்தலில் இந்திரா காங்கிரசின் மொஹ்சினா கித்வாயிடம் தோல்வியடைந்தார்.[1] பின்னர் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி, 1980ல் ஜனதா கட்சி (மதச்சார்பற்ற) வேட்பாளராக அசம்கரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் காங்கிரசில் சேர்ந்த இவர் 1989 மக்களவைத் தேர்தலில் புல்பூரில் தோல்வியடைந்தார். 1991-ல் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா தளம் வேட்பாளராக அசம்கர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
சந்திரஜித் யாதவ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1991-1996 | |
முன்னையவர் | இராம் கிருஷ்ணா யாதவ் |
பின்னவர் | இராம் காந்த் யாதவ் |
பதவியில் 1980-1984 | |
முன்னையவர் | மொக்சினா கித்வாய் |
பின்னவர் | சந்தோசு சிங் |
பதவியில் 1967-1977 | |
முன்னையவர் | இராம் ஹராக் யாதவ் |
பின்னவர் | இராம் நரேஷ் யாதவ் |
தொகுதி | அசம்கர், உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சருபாகா, அசம்கர், பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா | 1 சனவரி 1930
இறப்பு | 25 மே 2007 | (அகவை 77)
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு, ஜனதா கட்சி |
துணைவர் | ஆசா யாதவ் |
மூலம்: [1] |
இந்திரா காந்தி அமைச்சகத்தில் மத்திய எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பணியாற்றினார்.[2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Verdict of Azamgarh firmly establishes Indira Gandhi's comeback trail".
- ↑ "Azamgarh byelection: Beginning of the end?". Sunil Sethi. இந்தியா டுடே. 31 May 1978. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
- ↑ "Chandrajit Yadav dead". The Hindu. 27 May 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/chandrajit-yadav-dead/article1848003.ece. பார்த்த நாள்: 11 November 2015.
- ↑ Sir Stanley Reed (1977). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. p. 798. பார்க்கப்பட்ட நாள் 12 June 2020.