இரமேஷ் குமார் யாதவா
இரமேஷ் குமார் யாதவா (Ramesh Kumar Yadava) இந்தியாவின் அரியானா, ரோஹ்தக், பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.[1]
இரமேஷ் குமார் யாதவா Prof. Ramesh Kumar Yadava | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இரமேஷ் 1953 ரேவரி, இந்தியா |
வாழிடம்(s) | பார்க்கோதாம்பூர், ரேவாரி |
முன்னாள் கல்லூரி | சௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் |
வேலை | துணைவேந்தர் |
தொழில்
தொகுயாதவா 2021-ல் பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பணியில் சேர்ந்தார். முன்பு இவர் அரியானாவில் உள்ள சவுத்ரி சரண் சிங் அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக, தீவனப் பிரிவு (மரபியல் மற்றும் தாவர வளர்ப்பு) துறையிலும் (1976-2013) பல்கலைக்கழக நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[2] இவர் HAU ஹிசாரில் 37 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 31சூலை 2013 அன்று ஓய்வு பெற்றார்.[3] இவர் அரியானா கிசான் ஆயோக் மற்றும் விவசாய செலவு விலை ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[4] இந்தியாவின் மத்தியப் பல்கலைக்கழகங்களின் பார்வையாளரான குடியரசுத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட சிக்கிம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jangra, Manoj (2021-06-22). "New vice chancellor joined Baba Mast Nath University | Hari Bhoomi". www.haribhoomi.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "Dr. Ramesh Kumar Yadava appointed as the new vice chancellor of Baba Mastnath University | Bhaskar".
- ↑ "HAU Directory of retired faculty" (PDF).
- ↑ "Haryana Kisan Ayog newsletter" (PDF).
- ↑ "Executive Council". cus.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "Authorities". cus.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.