இரமேஷ் மெண்டோலா
இரமேஷ் மெண்டோலா (Ramesh Mendola) இந்தோரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசியல்வாதி ஆவார் [2] 2008, 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்தூர்-2 சட்டப் பேரவைத்தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். [3] 2013 தேர்தலில் இவர் 91000 வாக்குகள் வித்தியாசத்தில் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். [4] 2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலிலிலும் மெண்டோலா மீண்டும் அதே தொகுதியிலிருந்து 71000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் மிகப்பெரிய வெற்றி வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். [5] இவர் மத்தியப் பிரதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உள்ளார். [6]
இரமேஷ் மெண்டோலா | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2008 | |
முன்னையவர் | கைலாஷ் விஜய்வர்கியா |
தொகுதி | இந்தோர்-2 |
மத்தியப் பிரதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1] நந்தன் நகர், இந்தோர், மத்தியப் பிரதேசம் | 13 நவம்பர் 1960
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகுஇந்தோரைச் சேர்ந்த ரமேஷ் மெண்டோலா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறார்.[7]
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, மெண்டோலா இந்தோர் நகரவைக்கு பலமுறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோர் பாஜகவின் நகரத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தனது தொகுதியான இந்தூர்-2 இல் உள்ள உள்ளூர் கடன் கூட்டுறவு சங்கமான நந்தா நகர் சாக் சககாரி சன்ஸ்தா மரியாடிட்டின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். [8]
சர்ச்சைகள்
தொகுஇரமேஷ் மெண்டோலா தனது தொகுதியான இந்தூர்-2 இல் அமைந்துள்ள நந்தநகரில் உள்ள ஒரு பள்ளி நிலத்தில், 'சுக்னி தேவி நில மோசடியில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். [9] [10] பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவுடன் இவர் நெருக்கமாக இருந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு அரசியல் வட்டாரங்களில் அதிகமாக விவாதிகப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் ரமேஷ் மெண்டோலா மீதான குற்றச்சாட்டுகள் உயர் நீதிமன்றத்தால் கைவிடப்பட்டது. " [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "official website data" (PDF).
- ↑ "Mendola discharged in land scam case". https://timesofindia.indiatimes.com/city/indore/mendola-discharged-in-land-scam-case/articleshow/58080910.cms.
- ↑ "MP polls: BJP MLA wins Indore-2 seat with margin of over 91,000 votes". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mp-polls-bjp-mla-wins-indore-2-seat-with-margin-of-over-91000-votes/articleshow/27097528.cms.
- ↑ "BJP MLA Ramesh Mendola wins Indore-2 seat with margin of over 91,000 votes". https://www.news18.com/news/india/bjp-mla-ramesh-mendola-wins-indore-2-seat-with-margin-of-over-91000-votes-655067.html.
- ↑ "Ramesh mendola repeats highest victory margin".
- ↑ "ओलिंपिक संघ मेंदोला अध्यक्ष और दिग्विजय पुन निर्विरोध सचिव बने".
- ↑ "By the Bhai". theweek.in. https://www.theweek.in/theweek/statescan/kailash-vijayvargiya-bjps-point-man-in-uttarakhand.html.
- ↑ "official data" (PDF).
- ↑ "Indore Sugni Devi Land Scam Case: Indore Sugni Devi Land Scam Case News in Hindi, Breaking News, Photos, Videos | Patrika Hindi News" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 20 July 2018.
- ↑ "Sugni Devi land scam case hearing today – Times of India". https://timesofindia.indiatimes.com/city/indore/Sugni-Devi-land-scam-case-hearing-today/articleshow/14754513.cms.
- ↑ "High Court drops charges against Mendola". http://www.freepressjournal.in/indore/indore-high-court-drops-charges-against-ramesh-mendola/1048365/.