கைலாஷ் விஜய்வர்கியா

இந்திய அரசியல்வாதி

கைலாஷ் விஜய்வர்கியா (Kailash Vijayvargiya) (பிறப்பு 13 மே 1956) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். [1] இவர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தோரின் நகரத்தந்தையாகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர், 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் மத்திய தலைமைக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு 12 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதேச அரசில் அமைச்சராகவும் இருந்துள்ளார். [2]

கைலாஷ் விஜய்வர்கியா
பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
குடியரசுத் தலைவர்
சட்டப் பேரவை உறுப்பினர், மத்தியப் பிரதேசம்
பதவியில்
2008–2018
முன்னையவர்அந்தர் சிங் தர்பார்
பின்னவர்உஷா தாகூர்
தொகுதிஎம்காவு
பதவியில்
1993–2008
பின்னவர்இரமேஷ் மெண்டோலா
தொகுதிஇந்தோர் -2
இந்தோரின் நகரத்தந்தை
பதவியில்
2000–2005
முன்னையவர்மதுக்கூர் வர்மா
பின்னவர்உமாசாக்சி சர்மா
அமைச்சர், மத்திய பிரதேச அரசு
பதவியில்
டிசம்பர் 2013 – 2016
இந்தோர் நகராட்சியின் மாமன்ற உறுப்பினர்
பதவியில்
1983–1988
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 மே 1956 (1956-05-13) (அகவை 67)
இந்தோர், மத்திய பாரதம், இந்தியா
(தற்போதைய மத்தியப் பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஆஷா
பிள்ளைகள்2
வாழிடம்(s)880/9, நந்தன் நகர், இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா
முன்னாள் கல்லூரிதேவி அகல்யா விசுவவித்யாலயா, இந்தோர்
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

விஜயவர்கியா, 2014 இல் அரியானாவுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார், [3] அத்தேர்தலில் சட்டமன்றத் தேர்தலில் கட்சி பெரும்பான்மை பெற்றது. இந்த வெற்றி மூலம் ஜூன் 2015 இல் இவர் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக அமித் சா இவரை நியமித்தார்.[4] மேலும், மேற்கு வங்காளத்தில் பாஜகவின் புதிய தலைவராகவும் நியமிக்கப்பட்டார். [5]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

விஜய்வர்கியா இந்தூரில் சங்கர்தயாள் விஜய்வர்கியாவுக்கு 1956 மே 13 அன்று பிறந்தார். இவர் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். பின்னர் இளங்கலைச் சட்டமும் படித்தார். இவர் ஆஷா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அரசியல்வாதியான ஆகாஷ் விஜய்வர்கியா உட்பட இரண்டு மகன்கள் உள்ளனர். [6]

அரசியல் வாழ்க்கை தொகு

விஜயவர்கியா, 1975 இல் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் மூலம் அரசியலில் நுழைந்தார். இவர் 1983 இல் இந்தோர் நகராட்சி உறுப்பினராகவும், 1985 இல் நிலைக்குழு உறுப்பினராகவும் ஆனார். பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றின் மாநிலச் செயலாளராகவும், மாநில பாஜக சட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார். 1985 இல் வித்யார்த்தி பரிசத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், 1992 இல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநிலத் துணைத் தலைவராகவும், அதன் தேசிய பொதுச் செயலாளராகவும், 1993 இல் குசராத்தின் தலைவராகவும் ஆனார். விஜய்வர்கியா 1990, 1993, 1998, 2003, 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [7]

2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு இவர் பொறுப்பாளராக இருந்தார். அக்கட்சி 2014இல் நடந்த அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து 4 லிருந்து 47 இடங்களாகப் பிடித்தது. [8] இந்த வெற்றியின் மூலம் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும், 2015 இல் மேற்கு வங்காளத்திற்கான கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் [9] [10] 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் 100 செல்வாக்கு மிக்க நபர் பட்டியலில் இவர் சேர்க்கப்பட்டார் [11] 2019 மக்களவைத் தேர்தலில் கட்சி 18 இடங்களை வென்றதால் இவர் மேற்கு வங்காளத்தில் பாஜகவின் முக்கிய நபராக கருதப்பட்டார். [12]

நகரத்தந்தை தொகு

விஜய்வர்கியா 2000 ஆம் ஆண்டில் இந்தோர் மாநகராட்சிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகரத்தந்தை ஆனார். இவர் 2003 இல் தெற்காசிய நகரத்தந்தை அமைப்பின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டார். மேலும் டர்பனில் நடந்த உலக பூமி உச்சி மாநாட்டில் இந்திய தன்னார்வ அமைப்பின் குழுவை வழிநடத்தினார். [7]

விஜய்வர்கியா 8 டிசம்பர் 2008 அன்று மத்தியப் பிரதேச அரசில் பொதுப்பணிகள், நாடாளுமன்ற விவகாரங்கள், நகர்ப்புற நிர்வாகம் மற்றும் மேம்பாடு போன்ற துறைகளின் அமைச்சராகப் பதவியேற்றார். இவருக்கு 1 ஜூலை 2004 அன்று மத அறக்கட்டளைகள், நன்கொடை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றின் துறை வழங்கப்பட்டது. விஜய்வர்கியா மீண்டும் பாபுலால் கௌரின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆகஸ்ட் 27, 2004 இல் இணைந்தார். இவர் 4 டிசம்பர் 2005 அன்று சிவராஜ் சிங் சௌகானின் அமைச்சரவையில் பொதுப்பணி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக மீண்டும் சேர்க்கப்பட்டார். [6]

சிவராஜ் சிங் சௌகானின் (2008 தேர்தலுக்குப் பிந்தைய தேர்தல்) இரண்டாவது அமைச்சரவையில், விஜய்வர்கியா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைகளை வகித்தார். மூன்றாவது அமைச்சரவையில் (2013 தேர்தலுக்குப் பின்), விஜய்வர்கியா நகர்ப்புற மேம்பாட்டுத் துறையை வகித்தார். [13] [14]

மேற்கோள்கள் தொகு

  1. "National Office Bearers". பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
  2. "BJP's Kailash Vijayvargiya Makes Friends and Controversies Easily". பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
  3. "MP minister Vijayvargiya appointed BJP's election in-charge for Haryana". 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
  4. "MP minister Kailash Vijayvargiya appointed BJP general secretary". 17 June 2015. http://www.business-standard.com/article/news-ani/mp-minister-kailash-vijayvargiya-appointed-bjp-general-secretary-115061701293_1.html. 
  5. "BJP affairs in-charge: Siddharth Nath Singh loses Bengal to Kailash Vijayvargiya, gets Andhra". 4 July 2015. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
  6. 6.0 6.1 "耂वजयवग틽ᘂय, ꈅी कैलाश" (PDF). பார்க்கப்பட்ட நாள் 24 January 2020.
  7. 7.0 7.1 "Department Of Public Relations,Madhya Pradesh". பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
  8. "Haryana election result: BJP wins 46 seats, gets majority". 18 October 2014. பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
  9. "BJP brings Kailash Vijayavargiya as in-charge for Bengal unit". 3 July 2015. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-brings-kailash-vijayavargiya-as-in-charge-for-bengal-unit/articleshow/47929794.cms. 
  10. "Kailash Vijayvargiya appointed observer of Bengal BJP". 5 July 2015. https://www.thehindu.com/news/cities/kolkata/kailash-vijayvargiya-appointed-observer-of-bengal-bjp/article7387656.ece. 
  11. "IE100: The list of most powerful Indians in 2021". 2021-03-28. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  12. "West Bengal results: With 18 seats, 40% vote share, BJP breathes down Trinamool Congress's neck". 24 May 2019.
  13. "Chouhan allocates portfolios, Gaur gets Home - Indian Express". பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
  14. "बंगाल में हार से BJP में कम नहीं हुआ कैलाश विजयवर्गीय का कद, बने रहेंगे राष्ट्रीय महासचिव".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாஷ்_விஜய்வர்கியா&oldid=3828350" இலிருந்து மீள்விக்கப்பட்டது