ஆகாஷ் விஜய்வர்கியா

இந்திய அரசியல்வாதி

ஆகாஷ் விஜய்வர்கியா (Akash Vijayvargiya) மத்தியப் பிரதேசத்தின் இந்தோரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார்.[2] 2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், ஆகாஷ் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும், 3 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவருமான அஷ்வின் ஜோஷியை 5700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது முதல் தேர்தலில் வெற்றியைப் பெற்றார்.[3] இவர் 'தேவ் சே மகாதேவ்' என்ற ஆன்மீக ஊக்க புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் ராம்தேவ் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மூத்த மகன் ஆவார்.[4]

ஆகாஷ் விஜய்வர்கியா
சட்டப் பேரவை உறுப்பினர், மத்தியப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
டிசம்பர் 2018
முன்னையவர்உஷா தாகூர்
தொகுதிஇந்தோர் -3
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 செப்டம்பர் 1984 (1984-09-12) (அகவை 39)[1]
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்
வாழிடம்(s)880/9, நந்தன் நகர், இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்http://akashvijayvargiya.com

சர்ச்சைகள் தொகு

26 ஜூன் 2019 அன்று, அரசு ஊழியர் ஒருவரை துடுப்பாட்ட மட்டையால் அடித்ததற்காக இவர் செய்திகளில் இடம் பெற்றார். இது இவரது சொந்த அரசியல் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.[5] காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, இவர் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Akash Vijayvargiya". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  2. एजेंसी (11 December 2018). "वरिष्ठ कांग्रेस नेता को बीजेपी के सचिव कैलाश विजयवर्गीय के बेटे ने दी चुनावी शिकस्त". Abpnews.abplive.in. பார்க்கப்பட்ட நாள் 15 December 2018.
  3. "Constituencywise-All Candidates". Archived from the original on 12 December 2018. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  4. "आकाश विजयवर्गीय कड़े मुकाबले में फंसे, कैलाश बोले- जीतेगा तो मेरा बेटti ही". Nai Dunia. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  5. "Case registered against BJP MLA Akash Vijayvargiya for beating up officer" (in en). India Today. Ist. https://www.indiatoday.in/india/story/after-beating-up-officer-with-bat-akash-vijayvargiya-says-dana-dan-is-our-line-of-action-1556472-2019-06-26. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாஷ்_விஜய்வர்கியா&oldid=3828170" இலிருந்து மீள்விக்கப்பட்டது