இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை ஏரி
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை ஏரி (ICF Lake ) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். சென்னையின் வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் இந்த ஏரி அமைந்துள்ளது. மழைக்காலத்தில் மழைநீர் பொழிவால் ஏரி அதன் உச்சநிலையை அடைகிறது.
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை ஏரி ICF Lake | |
---|---|
அமைவிடம் | ஐ.சி.எப் காலனி, வில்லிவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 13°06′12″N 80°13′03″E / 13.10333°N 80.21750°E |
வகை | நீர்த்தேக்கம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 450 m (1,480 அடி)[1] |
அதிகபட்ச அகலம் | 270 m (890 அடி)[1] |
சராசரி ஆழம் | 7 m (23 அடி)[1] |
குடியேற்றங்கள் | சென்னை |
வரலாறு
தொகு1930 ஆம் ஆண்டுகளில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டதிலிருந்து இந்த ஏரி இப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. [2] 1950 ஆம் ஆண்டு வரை இந்நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் ஒரு வடிகட்டுதல் அலகு மூலம் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வழங்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டுகளில் ஏரி எண்ணெய் கழிவுகள் கலப்பதால் மாசுபடத் தொடங்கியது. பின்னர் வில்லிவாக்கம் பகுதியில் இருந்து சாக்கடை நீரும் கலந்து இணைந்ததால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. [2] 2017 ஆம் ஆண்டில், இரயில்பெட்டி தொழிற்சாலை நிறுவனம் ₹ 10 மில்லியன் [3] செலவில் ஏரியை ஆய்வு செய்து புனரமைத்தது.[4] ஏரியில் இருந்த கசடுகளை அகற்றி ஏரியில் புதிய வகை மீன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏரியைச் சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டது.
ஏரி
தொகு450 மீட்டர் நீளம், 270 மீட்டர் அகலம் மற்றும் 7 மீட்டர் ஆழம் கொண்டதாக ஏரியின் பரப்பளவு உள்ளது.[5] ஏரியின் படுகையில் ஏழு ஆழ்துளை கிணறுகள் மூழ்கியுள்ளன. [1] ஏரியைச் சுற்றியுள்ள பாதையின் அளவு 3 கிலோமீட்டர்கள். [6]
எதிர்காலம்
தொகுஇரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை எதிர்காலத்தில் 15,000 சதுர அடியில் பசுமை இல்லத்தை 7.5 மில்லியன் செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது மூலிகை, மலர், அலங்கார மற்றும் உட்புற தாவரங்களை உள்ளடக்கிய நான்கு அறைகளைக் கொண்டிருக்கும். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Revived ICF lake to turn a source of potable water". The Hindu (Chennai). 23 May 2017. https://www.thehindu.com/news/cities/chennai/revived-icf-lake-to-turn-a-source-of-potable-water/article18528357.ece. பார்த்த நாள்: 8 August 2018.
- ↑ 2.0 2.1 Lakshmi, K. (5 May 2009). "Will life flow back to ICF Lake?". The Hindu (Chennai: Kasturi & Sons). https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Will-life-flow-back-to-ICF-Lake/article16590881.ece. பார்த்த நாள்: 8 August 2018.
- ↑ 3.0 3.1 "Rail factory goes green, to restore lake in Villivakkam". The Times of India (Chennai: The Times Group). 20 July 2017. https://timesofindia.indiatimes.com/city/chennai/rail-factory-goes-green-to-restore-lake-in-villivakkam/articleshow/59672623.cms. பார்த்த நாள்: 8 August 2018.
- ↑ Ganesan, V. (15 June 2018). "The story of a lake". The Hindu (Chennai): pp. 3 (Downtown). https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/the-story-of-a-lake/article24168582.ece. பார்த்த நாள்: 8 August 2018.
- ↑ ஜூலை 17, பதிவு செய்த நாள்:; 2019. "ஐ.சி.எப்., ஏரியை - Dinamalar Tamil News". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ Sampath, N. (29 May 2017). "Chennai: Lake at Integral Coach Factory gets new lease of life". The Deccan Chronicle (Chennai). https://www.deccanchronicle.com/nation/current-affairs/290517/chennai-lake-at-integral-coach-factory-gets-new-lease-of-life.html. பார்த்த நாள்: 8 August 2018.