இரவி நாராயண் பானி
இந்திய அரசியல்வாதி
இரவி நாராயண் பானி (Ravi Narayan Pani) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சனதா தளம் கட்சியின் உறுப்பினராக ஒடிசாவின் தியோகர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
இரவி நாராயண் பானி Ravi Narayan Pani | |
---|---|
இரவி நாராயண் பானி உருவப்படம் | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1989-1991 | |
முன்னையவர் | சிறீவல்லவு பாணிகிரகி |
பின்னவர் | சிறீவல்லவு பாணிகிரகி |
தொகுதி | தியோகர் சட்டமன்றத் தொகுதி, ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 ஏப்ரல் 1950 பிச்சிகோல், டேங்கானாள் மாவட்டம், ஒடிசா |
அரசியல் கட்சி | சனதா தளம் |
துணைவர் | கிரண் சுந்தரி பானி |
மூலம்: [1] |
தற்போது ஒடிசா அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இரவி நாராயண் பானி ஒடிசா சட்டமன்றத்தில் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Deogarh Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
- ↑ India. Parliament. Lok Sabha (1991). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 499. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.
- ↑ The Illustrated Weekly of India. Published for the proprietors, Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press. 1990. p. 16. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.