இராகுல் தௌலத்ராவ் அகர்
இந்திய அரசியல்வாதி
இராகுல் தௌலத்ராவ் அகர் (Rahul Daulatrao Aher) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஒரு மருத்துவரான இவரது தந்தையின் பெயர் தௌலத்ராவ் அகர் என்பதாகும். அனுச்சா என்ற பெண்ணை இராகுல் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராட்டிர மாநிலத்தின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான சந்துவாது சட்டப்பேரவை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். மகாராட்டிர மாநில அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இராகுல் தௌலத்ராவ் அகர் செயல்பட்டார். 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரை 11,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் தோற்கடித்து இவர் வெற்றி பெற்றார்.[1][2][3][4]
மருத்துவர் இராகுல் தௌலத்ராவ் அகர் Dr. Rahul Daulatrao Aher | |
---|---|
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | சிரீசுகுமார் கொட்வால் |
தொகுதி | சந்துவாது சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 ஆகத்து 1973 நாசிக் |
துணைவர் | அனுச்சா |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
பெற்றோர் |
|
கல்வி | எம்.பி.பி.எசு எம்.எசு (எலும்பியல்) |
தொழில் | மருத்துவர், அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maharashtra Assembly Election 2014: BJP wrests all three seats from MNS in Nashik city". 19 October 2015. http://www.india.com/news/india/maharashtra-assembly-election-2014-bjp-wrests-all-three-seats-from-mns-in-nashik-city-176180/. பார்த்த நாள்: 28 November 2017.
- ↑ "Maharashtra Assembly Election 2014: BJP wrests all three seats from MNS in Nashik city". India.com. Press Trust of India. 19 October 2014. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
- ↑ "BJP keeps a check on 'imports'". Times of India. 4 February 2017. https://timesofindia.indiatimes.com/city/nashik/bjp-keeps-a-check-on-imports/articleshow/56969285.cms. பார்த்த நாள்: 3 December 2017.
- ↑ "Maharashtra blueprint to boost tourism in Nashik". Times of India. 28 August 2016. https://timesofindia.indiatimes.com/city/nashik/Maharashtra-blueprint-to-boost-tourism-in-Nashik/articleshow/53896246.cms. பார்த்த நாள்: 3 December 2017.