இராகேசு யாதவ்
இராகேசு யாதவ் (Rakesh Yadav) என்பவர் இதயநோய் நிபுணர் ஆவார். இவர் புது தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.[1]
இராகேசு யாதவ் Rakesh Yadav | |
---|---|
பிறப்பு | கயா மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
பட்டம் | பேராசிரியர், மருத்துவர் |
விருதுகள் | மரு. பி. சி. ராய் விருது (2014, விருது, 2017-ல்) யாஷ் பாரதி விருது (2015) |
கல்விப் பின்னணி | |
கல்வி | சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி (எம்.டி.) அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி (டி.எம்.) |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுயாதவ், பீகாரின் கயா மாவட்டத்தில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தில் உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தார். இவர் உத்தரப்பிரதேச கல்வித் திட்டத்தில் (உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி உத்தரப் பிரதேசம்) 10ஆம் வகுப்பில் (உயர்நிலைப் பள்ளி) முதலிடம் பிடித்தார். இவர் ஆக்ராவில் (சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி) முதுநிலை மருத்துவ பட்டம் பெற்ற பின்னர்,[2] பிறகு புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் இருதய மருத்துவத்தில் மருத்துவ பட்டயப்படிப்பினை முடித்தார்.[3]
பணி மற்றும் சாதனைகள்
தொகுஇதயவியலில் மருத்துவ பட்டம் பெற்ற பிறகு , புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் இதயவியல் பிரிவில் பணியில் சேர்ந்தார். தற்பொழுது இங்குப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.[4][5] 2015ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிக உயரிய குடிமகன் விருதான யாஷ் பாரதி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[6][7] 2014ஆம் ஆண்டுக்கான மரு. பி. சி. ராய் விருது இவருக்கு 2017-ல் வழங்கப்பட்டது.[8][9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Faculty". AIIMS NEW (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
- ↑ "सोच बदलो ज़िंदगी बदल जाएगी | Change Your Life | Dr Rakesh Yadav | Josh Talks Hindi - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
- ↑ "Alumini". AIIMS NEW (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
- ↑ "Dr. Rakesh Yadav | Professor | AIIMS". medtalks.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
- ↑ "Faculty". AIIMS NEW (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
- ↑ https://www.pressreader.com/india/hindustan-times-lucknow/20150209/281560879218287. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24 – via PressReader.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ "यश भारती सम्मान से 56 हस्तियां अलंकृत". m.jagran.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
- ↑ "Prez honours AIIMS chief Randeep Guleria with Dr B C Roy award". Business Standard India. Press Trust of India. 2017-03-28. https://www.business-standard.com/article/pti-stories/prez-honours-aiims-chief-randeep-guleria-with-dr-b-c-roy-award-117032801192_1.html.
- ↑ "AIIMS director, doctors given Dr BC Roy award" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
- ↑ "AIIMS, Sir Ganga Ram doctors get Dr B C Roy award". Business Standard India. Press Trust of India. 2017-03-28. https://www.business-standard.com/article/pti-stories/aiims-sir-ganga-ram-doctors-get-dr-b-c-roy-award-117032801037_1.html.