இராசீவ் மகரிசி

இராசீவ் மகரிசி (Rajiv Mehrishi) என்பவர் தற்போதைய இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஆவார். 2017 செப்டம்பர் 25 முதல் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஐக்கிய நாட்டு சபையின் தணிக்கையார் குழுவில் தலைவராகவும் உள்ளார்.[1]

இராசீவ் மகரிசி

புது தில்லியின் தூய ஸ்டிபன் கல்லூரியில் பயின்று இளங்கலை மற்றும் முதுவர் கலை பட்டங்களை இராசீவ் மகரிசி பெற்றார் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கிளாசுக்கோ வணிகப் பள்ளியில் பயின்று வணிக நிருவாகத்தில் பட்டம் பெற்றார் 1978 ஆம் ஆண்டுக்குரிய அணியில் இராசஸ்தானைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாக ஆனார். இராசஸ்தான் மாநில அரசில் முதன்மைச் செயலாளராகவும் நடுவணரசில் நிதித் துறைச் செயலாளராகவும் பின்னர் நடுவணரசின் உள்துறைச் செயலாளராகவும் இருந்தார்.

மேற்கோள்

தொகு
  1. "Current Membership". United Nations Board of Auditors. பார்க்கப்பட்ட நாள் October 6, 2017. {{cite web}}: Invalid |url-status=No (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசீவ்_மகரிசி&oldid=3574886" இலிருந்து மீள்விக்கப்பட்டது