தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா

(இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா (Comptroller and Auditor General (CAG) of India) இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (Chapter V) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். இவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.[3]

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
தற்போது
கிரிஷ் சந்திர முர்மு

ஆகஸ்ட் 2020 முதல்
பரிந்துரையாளர்இந்தியப் பிரதமர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்6 ஆண்டுகள் அல்லது 65 அகவை வரை
(இரண்டில் முன்னதாக வருமவயம்)
முதலாவதாக பதவியேற்றவர்வி. நரகரி ராவ்
ஊதியம்90,000 (US$1,100)[1][2]
இணையதளம்The Comptroller and Auditor General of India

அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப்பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொது கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. நாடெங்கும் 58,000 ஊழியர்களைக் கொண்ட இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் தலைவராகவும் செயல்படுகிறார்.

இந்திய அதிகார முன்னுரிமைப் பட்டியலில் ஒன்பதாவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது G.C.முர்மு பதவியில் உள்ளார். இந்தியாவின் 13வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான ராஜீவ் மகரிஷி செப்டம்பர், 2017ல் பதவியேற்றார். வினோத் ராய் தலைமையின் கீழ் இயங்கிய பொழுது இந்த அமைப்பு அரசின் முறைகேடுகளை வெளிப்படுத்தியமையால் குறிப்பாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு,பொதுநலவாய விளையாட்டுகள் நடத்துதலில் ஊழல் மற்றும் இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு பரவலாக ஊடகங்களில் அறியப்படுகிறது.[4][5]

அரசுடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்-பொது பங்களிப்புத் திட்டத்தை (PPP) ஆய்வு செய்யும் அதிகாரம் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு உண்டு.[6]

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்களின் பட்டியல்

தொகு
எண். இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பதவிக்காலத் தொடக்கம் பதவிக்கால முடிவு
1 வி. நரஹரி ராவ் 1948 1954
2 ஏ. கே. சந்தா 1954 1960
3 ஏ. கே. ராய் 1960 1966
4 எஸ். ரங்கநாதன் 1966 1972
5 ஏ. பாக்சி 1972 1978
6 ஜியான் பிரகாஷ் 1978 1984
7 டி. என். சதுர்வேதி 1984 1990
8 சி. ஜி. சோமையா 1990 1996
9 வி. கே. சங்லு 1996 2002
10 வி. என். கௌல் 2002 2008
11 வினோத் ராய் 2008 2013
12 ஷசி காந்த் ஷர்மா 2013 2017
13 இராசீவ் மகரிசி 2017 2020
14 கிரீஷ் சந்திர முர்மு 2020 தற்போது பதவியில்

ஆதாரம்:[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "THE COMPTROLLER AND AUDITOR-GENERAL'S (DUTIES, POWERS AND CONDITIONS OF SERVICE) ACT, 1971". CAG India. Archived from the original on 27 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "CAG - Article 148 of Constitution of India". Archived from the original on 28 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 06 April 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  3. "சி.ஏ.ஜி பணி - என்றால் என்ன?". தி இந்து. 4 October 2013. http://tamil.thehindu.com/business/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article5201116.ece. பார்த்த நாள்: 12 October 2013. 
  4. "A watchdog that bites". The Hindu. 20 August 2012 இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AF1G2lN4?url=http://www.thehindu.com/opinion/editorial/article3796000.ece. பார்த்த நாள்: 27 August 2012. 
  5. B S Arun. "CAG ‘activism’ gets the thumbs up". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AF1G2hzW?url=http://www.deccanherald.com/content/183601/cag-activism-gets-thumbs-up.html. பார்த்த நாள்: 27 August 2012. ""Corporate India needs to go through a phase of reflection and soul searching"" 
  6. "அரசுத் திட்டங்களில் பங்கேற்கும் தனியார் கணக்குகளை ஆய்வு செய்வோம்: சிஏஜி". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 14 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Former CAG". Archived from the original on 18 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 09 May 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)

8. இந்தியாவின் 14-ஆவது தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) ஆக கிரிஷ் சந்திர முர்மு சனிக்கிழமை பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.

வெளி இணைப்புகள்

தொகு