வி. கே. சங்லு
வி. கே. சங்லு (V. K. Shunglu) என்பவர் இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பணியாற்றியவர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் 1962ஆம் ஆண்டைச் சார்ந்த பணியாளர் தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவரது ஆட்சிப் பணியில் குடிமக்களுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக 2019-ல் பத்ம பூசண் விருது பெற்றார்.[1][2]
வி. கே. சங்லு | |
---|---|
9வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா | |
பதவியில் 15 மார்ச் 1996 – 14 மார்ச் 2002 | |
முன்னையவர் | சி. ஜி. சோமையா |
பின்னவர் | வி. என். கௌல் |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசங்லு 1959ஆம் ஆண்டு தில்லியில் உள்ள துயா இசுடீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1961ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]
தொழில்
தொகுசங்லு 1962-ல் மத்தியப் பிரதேச அதிகாரிப் பிரிவில் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். 1993-ல் மின்துறையின் சிறப்புச் செயலாளராகவும், 1994-ல் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1995-ல் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும், வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1996-ல் இந்தியாவின் 9வது தலைமைக் கணக்குத் தணிக்கையராக நியமிக்கப்பட்டார். இவர் 2002-ல் பணி ஓய்வு பெறும் வரை இந்தப் பதவியில் பணியாற்றினார்.[1][4] .
ஓய்வுக்குப் பின்
தொகுஓய்வு பெற்ற அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு மன்றமான இந்தியா மறுமலர்ச்சி முன்முயற்சியின் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பொதுநலவாய விளையாட்டு ஊழல் தொடர்பான விசாரணைக் குழு மற்றும் டெல்லி மாநிலத்தில் அரசு நியமனங்களில் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த சங்லு கமிட்டி உள்ளிட்ட பல குழுக்களிலும் இவர் உறுப்பினராக இருந்துள்ளார். சர்தார் சரோவர் அணையின் கட்டுமானத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு மதிப்பீடு செய்வதற்கான குழுவிற்கும், இந்திய மேலாண்மை கழகங்களின் கட்டணத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவை ஆராயும் குழுவிற்கும் இவர் தலைமை தாங்கினார். இவர் 2014 முதல் தில்லி பொதுப் பள்ளி சமூகத்தின் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும் ஆனார்.
பத்ம பூசண் விருது
தொகுபொதுச் சேவைகளில் இவரின் பங்களிப்புகளுக்காக இவருக்கு 2019ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[5][6][2][7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "V.K. Shunglu new CAG of India, IA&AS officers get offended". இந்தியா டுடே. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19960415-v.k.-shunglu-new-cag-of-india-ia-as-officers-get-offended-834635-1996-04-15."V.K. Shunglu new CAG of India, IA&AS officers get offended". India Today. Archived from the original on 2019-01-27. Retrieved 27 January 2019.
- ↑ 2.0 2.1 "Padma awardees list". The Week. https://www.theweek.in/wire-updates/national/2019/01/25/del98-padma-list.html."Padma awardees list". The Week. Archived from the original on 27 January 2019. Retrieved 27 January 2019.
- ↑ "V. K. Shunglu, Chairman, ASREC (India) Limited". Bloomberg L.P.. https://www.bloomberg.com/research/stocks/private/person.asp?personId=62064231.
- ↑ "V.K. SHUNGLU". CAG. https://cag.gov.in/sites/default/files/footer_pdf/cag_photos.pdf.
- ↑ "Newsmaker: V K Shunglu". பிசினஸ் ஸ்டாண்டர்ட். https://www.business-standard.com/article/economy-policy/newsmaker-v-k-shunglu-110102200082_1.html.
- ↑ "After Delhi Inquiry, Ex-Auditor VK Shunglu Has A New Task. This Time By CBSE". என்டிடிவி. https://www.ndtv.com/india-news/after-delhi-inquiry-ex-auditor-vk-shunglu-has-a-new-task-this-time-by-cbse-1684560.
- ↑ "Shunglu Panel report on Narmada submitted". Outlook. https://www.outlookindia.com/newswire/story/shunglu-panel-report-on-narmada-submitted/396436.
- ↑ "IIMs refute Shunglu". Rediff.com. https://www.rediff.com/money/report/iim/20040630.htm.