இராசுமசு பலுடன்
இராசுமசு பலுடன் (Rasmus Paludan, பிறப்பு 2 சனவரி 1982) என்பவர் ஒரு டேனிய-சுவீடிய அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார், இவர் ஸ்ட்ராம் குர்சு என்ற வலதுசாரி அரசியல் கட்சியின் நிறுவனரும் அதன் தற்போதைய தலைவரும் ஆவார். இசுலாமிய மதத்தை தடை செய்ய வேண்டும், மேற்கத்தியர் அல்லாதவர்களை டென்மார்க்கில் இருந்து நாடு கடத்தப்பட வேண்டும் போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக பலுடன் அறியப்பட்டுள்ளார்.[1][2] இவர் ஒரு தீவிர வலதுசரியாகவும் [3][4][5] வலதுசாரி தீவிரவாதியாகவும் அரசியலார்வலர்களாலும் ஊடகங்களாலும் கருதப்படுகிறார்.[6][7][8]
இராசுமசு பலுடன் | |
---|---|
2023 இல் குரானை எரிக்கும் இராசுமசு பலுடன் | |
ஸ்ட்ராம் குர்சு கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மார்ச் 2017 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சனவரி 1982 வடசீலாந்து, டென்மார்க் |
குடியுரிமை |
|
அரசியல் கட்சி | ஸ்ட்ராம் குர்சு (2017 முதல்) நியூ ரைட் (2016–17) வென்ஸ்ட்ரே (2010) டேனியச் சமூக சுதந்திரக் கட்சி (RU) (c. 2003) |
பிற அரசியல் தொடர்புகள் | ஆல்டர்நேட்டிவ் ஃபார் சுவீடன்(c. 2021) For Frihed (2016–17) June Movement (c. 2009) |
கல்வி | கோபனாவன் பல்கலைக்கழகம் (முதுகலை சட்டம்) |
வேலை | செயற்பாட்டாளர், வழக்கறிஞர், அரசியல்வாதி |
பலுடன் இசுலாமிய விமர்சன நிகழ்வுகளுக்காகவும் ஆர்ப்பாட்டங்களுக்காகவும் அறியப்படுகிறார், இவை பெரும்பாலும் பல முசுலீம் குடியேறியவர்கள் வசிக்கும் நகர்ப்புறங்களில் நிகழ்த்தினார், ஆரம்பத்தில் டென்மார்க்கில் நிகழ்த்தினார்.[9] ஆர்ப்பாட்டங்களின் போது, இவர் குர்ஆனை "வேசிகளின் பெரிய நூல்" [10] என்றும், இசுலாத்தை "ஓரினச்சேர்க்கை இசுலாம்" என்றும் அழைத்தார், இவர் குர்ஆனை எரித்து, எச்சில் துப்புவார் [11] நூலில் சிறுநீர் கழிக்க மக்களை ஊக்குவித்தார்.[12] பலுடன் தனது ஆர்ப்பாட்டங்களின் காணொளிகளாக பதிவுசெய்து ஸ்ட்ராம் குர்சு கட்சியின் யூடியூப் சேனலில்[தெளிவுபடுத்துக] பதிவேற்றுவதன் மூலம் குறிப்பாக கவனத்தை ஈர்த்துள்ளார்.[13][14]இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுகள் யூடியூப் சமூக வழிகாட்டுதல்கள் தடை செய்கிறது இதன் விளைவாக, 2020 ஆம் ஆண்டில், யூடியூப் நிறுவனத்தால் கட்சி சேனல்[தெளிவுபடுத்துக] மூடப்பட்டது.[15] அவர் குர்ஆனை எரித்தது 2022 இல் சுவீடனில் கலவரத்திற்கு வழிவகுத்தது, 2023ல் இவர் நிகழ்த்திய எரிப்பு "ஒரு மகத்தான உலகளாவிய சர்ச்சையை" ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.[16]
வழக்கறிஞராக, பலுடன் பத்திரிகைகளின் கவனத்துடன் பல வழக்குகளில் பாதுகாவலராக இருந்துள்ளார். பலுடன் பல வழக்குகளிலும், சட்ட மோதல்களிலும் ஈடுபட்டுள்ளார். 2019 இல், டேனிய இனவெறி விதியை மீறியதற்காக இவருக்கு 14 நாட்கள் நிபந்தனை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[17] 2021 ஆம் ஆண்டில் இனவெறி மற்றும் இழிவான அறிக்கைகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார், 3 மாத சிறைத்தண்டனை நிபந்தனையுடன் பெற்றார், இதில் சோமாலிய பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டியிருந்தது.[18]
பலுடன் தனது செயற்பாட்டிற்காக எதிரான அச்சுறுத்தல்களால் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பில் உள்ளார்.[19]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Stram Kurs krydser 12000 vælgererklæringer" (in டேனிஷ்). DR. 23 April 2019. Archived from the original on 1 May 2019.
- ↑ "Stram Kurs er opstillingsberettiget til folketingsvalg". msn.dk. Ritzau. 6 May 2019 இம் மூலத்தில் இருந்து 26 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191226111218/https://www.msn.com/da-dk/nyheder/indland/stram-kurs-er-opstillingsberettiget-til-folketingsvalg/ar-AAAYMQ5.
- ↑ Switzer, Ryan; Beauduin, Adrien (6 December 2022). "Embodied nativism in Denmark: rethinking violence and the far right". Ethnic and Racial Studies (Informa UK Limited) 46 (7): 1335–1356. doi:10.1080/01419870.2022.2143716. பன்னாட்டுத் தர தொடர் எண்:0141-9870.
- ↑ Bangstad, Sindre (5 October 2020). "Is free speech racist?". Ethnic and Racial Studies (Informa UK Limited) 44 (8): 1401–1404. doi:10.1080/01419870.2020.1825759. பன்னாட்டுத் தர தொடர் எண்:0141-9870.
- ↑ Kondor, Katherine; Littler, Mark (2023-09-12). The Routledge Handbook of Far-Right Extremism in Europe. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-00-089703-6.
- ↑ "Danish far-Right extremist Rasmus Paludan to stand in Swedish election". The Local Sweden. 20 April 2022.
- ↑ Phalnikar, Sonia (20 April 2022). "Political provocations in Sweden – DW – 04/20/2022". dw.com. பார்க்கப்பட்ட நாள் 21 August 2023.
- ↑ "Right-wing extremist Paludan wants to hold May 1st rallies in Stockholm and Uppsala". 26 April 2022. https://sverigesradio.se/artikel/right-wing-extremist-paludan-wants-to-hold-may-1st-rallies-in-stockholm-and-uppsala.
- ↑ Sisseck, Jan (27 September 2018). "Kontroversiel youtuber på vej til Østjylland: Vil provokere muslimer" (in da). Århus Stiftstidende இம் மூலத்தில் இருந்து 26 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191226210227/https://stiften.dk/artikel/kontroversiel-youtuber-p%C3%A5-vej-til-%C3%B8stjylland-vil-provokere-muslimer.
- ↑ Rathje, Marianne (2019-05-20). "Han bruger udtryk som 'luderbog', men ...: Det er slående, at Rasmus Paludan faktisk ikke benytter sig af ret mange skældsord" (in da). Politiken இம் மூலத்தில் இருந்து 20 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190520110314/https://politiken.dk/kultur/art7204973/Det-er-sl%C3%A5ende-at-Rasmus-Paludan-faktisk-ikke-benytter-sig-af-ret-mange-sk%C3%A6ldsord.
- ↑ Christensen, Cæcilie Dohn (2019-04-15). "Koranafbrændinger og kontroversielle udtalelser – Rasmus Paludan går på gaden igen" (in da). TV 2 இம் மூலத்தில் இருந்து 20 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191120005545/https://nyheder.tv2.dk/samfund/2019-04-15-koranafbraendinger-og-kontroversielle-udtalelser-rasmus-paludan-gaar-paa-gaden.
- ↑ "Ekstremist vil tisse på koranen". 24syv Morgen (in டேனிஷ்). Radio24syv. 2019-03-04. Archived from the original on 18 April 2019.
- ↑ Kristensen, William (2019-04-15). "Fra cykelstiens vogter til "Frihedens Soldat"" (in da). Jyllands-Posten இம் மூலத்தில் இருந்து 29 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200829093105/https://jyllands-posten.dk/indland/ECE11322387/fra-cykelstiens-vogter-til-frihedens-soldat/.
- ↑ Gjerding, Sebastian; Dahlin, Ulrik (2019-06-11). "Rasmus Paludan er større på YouTube end alle de andre partier tilsammen" (in da). Information இம் மூலத்தில் இருந்து 29 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190629113717/https://www.information.dk/indland/2019/06/rasmus-paludan-stoerre-paa-youtube-andre-partier-tilsammen.
- ↑ "Stram Kurs-kanal på YouTube er blevet lukket" (in da). Politiken. Ritzau. 2020-02-15 இம் மூலத்தில் இருந்து 28 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200628230056/https://politiken.dk/kultur/medier/art7657189/Stram-Kurs-kanal-p%C3%A5-YouTube-er-blevet-lukket.
- ↑ Taylor, Adam (3 August 2023). "How Quran burners got the global attention they wanted". The Washington Post. https://www.washingtonpost.com/world/2023/08/03/sweden-quran-burning-denmark-islam-stunt-global-attention/.
- ↑ Mortensen, Mikkel Walentin; Søndberg, Astrid (2019-07-04). "Landsretten stadfæster: Rasmus Paludan dømt for racisme". TV 2 (in டேனிஷ்). Archived from the original on 3 September 2019.
- ↑ Oldager, Mathias (2 September 2021). "Landsret mildner straf for racisme til Rasmus Paludan" (in da). DR. https://www.dr.dk/nyheder/seneste/landsret-mildner-straf-racisme-til-rasmus-paludan.
- ↑ Frydendahl, Lise Soelberg (11 March 2020). "Når Rasmus Paludan sover, må betjente sidde otte timer i en bil uden adgang til toilet" (in da). DR. https://www.dr.dk/nyheder/regionale/midtvest/naar-rasmus-paludan-sover-maa-betjente-sidde-otte-timer-i-en-bil-uden.