இராச இராசேசுவரி

நியூயார்க்கில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி

இராச இராசேசுவரி (Raja Rajeswari) என்பவர் நியூயார்க்கு குற்றவியல் நீதி மன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்ற இந்தியப் பெண்மணி ஆவார். சென்னை நகர் ஆழ்வார் பேட்டையில் வளர்ந்தவர்.

இளமைக் காலம்

தொகு

இவருடைய தாயார் பத்மா ராமநாதன் நடனக் கலைஞர் மற்றும் ஆசிரியர். தந்தை ஓர் அலுவலகத்தில் மேலாளர். பதினாறு அகவையில் இராசராசேசுவரி அமெரிக்காவில் குடியேறினார். நியூயார்க்கில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர் அங்கேயே நிலையாக வசிக்க வாய்ப்புகள் இவருக்கு ஏற்பட்டன.

சட்டப் பணி

தொகு

புரூக்லின் சட்டப் பள்ளியில் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார். பதினாறு ஆண்டுகள் மாவட்ட நீதி மன்றத்தில் பணி ஆற்றினார். பல் வேறு நீதி மன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் அனுபவம் பெற்றார். 2015 ஆம் ஆண்டு ஏப்பிரல் 17 ஆம் பக்கலில் மாவட்ட உதவி நீதிபதி என்னும் பதவியை ஏற்றார். பாலியல் குற்ற வழக்குகளை உசாவி தீர்ப்புகள் வழங்கி வருகிறார். குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கவனித்து அவர்களுக்கு உதவி புரிகிறார். குழந்தைகள் பாலியல் வன்செயல்களில் ஈடுபட்டு குற்றம் செய்த கார்லோஸ் ரொசாரியோ வழக்கில் தீர்ப்பு வழங்கியதில் இராசராசேசுவரிக்குப் புகழ் கிடைத்தது.

பிற திறமைகள்

தொகு

இராசராசேசுவரி பரத நாட்டியம் குச்சு புடி நடனம் ஆகியவற்றில் வல்லவர். அவருடைய தாயார் நடத்தும் ப்த்மாலாய நடன மன்றத்தின் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளார். இந்திய மொழிகளையும் தென்னாசிய மொழிகளையும் சரளமாகப் பேசுகிறார்

மேற்கோள்

தொகு

http://www.thehindu.com/news/international/chennaiborn-raja-rajeswari-is-new-yorks-first-indianamerican-woman-judge/article7149985.ece

http://www.firstpost.com/world/raja-rajeswari-appointed-new-york-citys-first-india-born-woman-judge-2218004.html

http://www.thehindu.com/news/cities/chennai/nyc-judge-raja-rajeswari-acknowledges-the-chennai-connect/article7165659.ece

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராச_இராசேசுவரி&oldid=3160000" இலிருந்து மீள்விக்கப்பட்டது