இராஜபாபு (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

இராஜா பாபு (Raja Babu) (பிறப்பு: புண்யமூர்த்துலா அப்பலா இராஜு ; 20 அக்டோபர் 1937 - 14 பிப்ரவரி 1983) ஒரு இந்திய நடிகரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரையுலகில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். மிகச்சிறந்த இந்திய நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்ட இவரது 9 அடி வெண்கல சிலை ப்வரது பிறந்த இடமான ஆந்திராவின் ராஜமன்றியில் திறக்கப்பட்டது.[1][2] தொடர்ச்சியாக ஏழு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்ற முதல் நகைச்சுவை நடிகரான இவர் தனது திரைவாழ்க்கையில் மொத்தம் ஒன்பது பிலிம்பேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். "சென்னை ஆந்திரா சங்கம்" தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான "கேடயத்தையும்", நூற்றாண்டின் நகைச்சுவை நடிகருக்கான விருதையும் வழங்கியது.

இராஜபாபு
பிறப்புபுண்யமூர்த்துலா அப்பலா இராஜு
(1937-10-20)20 அக்டோபர் 1937
ராஜமன்றி, கிழக்கு கோதாவரி மாவட்டம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய இந்தியா)
இறப்பு14 பெப்ரவரி 1983(1983-02-14) (அகவை 45)
ஐதராபாத்து
பணிநடிப்பு (நாயகன், நகைச்சுவை நடிப்பு)
வாழ்க்கைத்
துணை
இலட்சுமி அம்மாலு
பிள்ளைகள்2
விருதுகள்தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
நந்தி விருது
Honorary doctorate

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமன்றியில் புண்யமூர்த்துலா உமாமகேசுவர ராவ் மற்றும் இரமணம்மா ஆகியோருக்கு அப்பலா இராஜுவாக பிறந்தார். புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களான, சிட்டி பாபு புண்யமூர்த்துலா, அனந்த் பாபு ஆகிய இருவரும் [3][4] இவரது சகோதரர்கள் ஆவர். இவர் தனது இடைநிலை (10 + 2) கல்வியை முடித்து, ஆசிரியர் பயிற்சி வகுப்பையிம் வெற்றிகரமாக முடித்தார். அதன்பிறகு தெலுங்கு ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், இவர் குக்க பிள்ள தொரிக்கிந்தி, நாலுகில்லா சாவடி, அல்லூரி சீதாராம ராஜு போன்ற நாடகங்களில் நடித்தார்.

தொழில் தொகு

நாடகங்களில் பாபுவின் நடிப்புத் திறனைக் கண்ட திரைப்பட இயக்குனர் கரிகாபதி ராஜராவ் என்பவர் பாபுவை இவரைத் திரைப்படங்களில் நடிக்க ஊக்குவித்தார். 1960 இல் சென்னைக்கு வந்த பாபு, ஆரம்பத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆரம்பித்தார். பின்னர், திரைப்பட இயக்குனர் அட்டலா நாராயண ராவ் 1960 இல் தனது "சமாஜம்" படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பை வழங்கினார். பாபு தனது அங்க சேட்டைகளால் நகைச்சுவை வேடங்களில் பெயர் பெற்றவர். இவர் 20 ஆண்டுகளில் ஏறக்குறைய 589 திரைப்படங்களில் நடித்துள்ளார்.[5]

சொந்த வாழ்க்கை தொகு

இராஜா பாபு 1965 ஆம் ஆண்டில் இலட்சுமி அம்மாலு (எழுத்தாளர் சிறீ சிறீ மைத்துனி) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாகேந்திர பாபு, மகேஷ் பாபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Andhra Pradesh / Rajahmundry News : Rajababu statue unveiled" இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110926114136/http://www.hindu.com/2011/04/10/stories/2011041054540600.htm. 
  2. "Raj Babu Punyamurthula :: Haasya Nata Chakravarthi". Rajbabu.crosscity.com. பார்க்கப்பட்ட நாள் 4 September 2012.
  3. "Ananth Babu". archive.is. Archived from the original on 3 February 2013.
  4. "Best Comedians Of Tollywood 1 - Business of Tollywood". Business of Tollywood. Archived from the original on 5 December 2013.
  5. Staff Reporter. "Rajababu statue unveiled". The Hindu.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜபாபு_(நடிகர்)&oldid=3505867" இலிருந்து மீள்விக்கப்பட்டது