இராஜீவ் காந்தி தேசியப் பூங்கா (இராமேஸ்வரம்-ஆந்திரா)
இராஜீவ் காந்தி தேசியப் பூங்கா (Rajiv Gandhi National Park) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள இராமேசுவரத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும்.[1] இதன் பரப்பளவு சுமார் 2.42 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு மணற்பாங்கான மண்ணில் வளரக்கூடிய வெப்பமண்டல உலர் இலையுதிர்க் காடுகள் காணப்படுகின்றன.[2] இது பென்னா ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுஇப்பகுதி முதலில் "ராமேஸ்வரம் தேசியப் பூங்கா" என்று 19 நவம்பர் 2005 அன்று அறியப்பட்டது, மேலும் 26 டிசம்பர் 2005 அன்று இந்தப் பெயர் "ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா” என்று மாற்றப்பட்டது.[3] பூங்காவைச் சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றுச்சூழல் மண்டலமாக 15 மே 2017 அன்று அறிவிக்கப்பட்டது.[4]
தாவரங்கள்
தொகுமர இனங்களில் டால்பெர்ஜியா சிசே, குரூயா வில்லோசா மற்றும் ஜிம்னெமா சில்வெஸ்டர் ஆகியவை அடங்கும்.
விலங்கினங்கள்
தொகுஇப்பகுதியில் சுமார் ஐம்பது பறவை இனங்களில் சிறிய எக்ரெட், கிளிகள் மற்றும் மயில் அடங்கும்.
தேள்கள், சிலந்திகள் போன்ற முதுகெலும்பற்ற விலங்குகள், பட்டாம்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், கிரிக்கெட் போன்ற பல்வேறு வகையான பூச்சிகள் இந்தக் காட்டில் ஏராளமாக உள்ளன. கருந்தவளை, ஆசியத் தேரை உயிரினங்களுடன் நீர்நில வாழ் விலங்கினங்கள் காணப்படுகின்றன. ஊர்வனவற்றில் ரஸ்ஸலின் எர்த் போவா, கண்ணாடி விரியன், அரணை போன்றவை அடங்கும். மயில்கள், சின்னக் கொக்கு, கிளிகள் போன்ற 50க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இந்தக் காட்டில் காணப்படுகின்றன. புள்ளி மான், முயல், இந்திய குழிமுயல் போன்ற பாலூட்டிகள் மணல் குன்றில் வாழ்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajiv Gandhi (Rameswaram) National Park". forests.ap.gov.in. Archived from the original on 31 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Parks". www.wiienvis.nic.in. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
- ↑ "Summary Record of 37th Meeting of the Reconstituted Committee of the Expert Appraisal Committee for Environmental Appraisal of Non-Coal Mining Projects Constituted under EIA Notification 2005" (PDF). October 2018. Archived from the original (PDF) on 14 May 2020.
- ↑ "Final Notification No.1563 (E), Dt: 15-05-2017 Published in the Gazette of India Regarding Declaration of Eco-sensative Zone around Rajiv Gandhi National Park in the State of Andhra Pradesh" (PDF). Andhra Pradesh Gazette. 2 August 2017. p. 69–85.