இராணி ஓஜா
இந்திய அரசியல்வாதி
இராணி ஓஜா (Queen Oja)(பிறப்பு 27 நவம்பர் 1950) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தொழிலதிபரும் ஆவார். அசாம் மாநிலம் குவகாத்தியினைச் சேர்ந்த ஓஜா பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் குவகாத்தி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். ஓஜா 1996 முதல் 1997 வரை குவகாத்தி மாநகராட்சி தந்தையாகவும் பணியாற்றினார்.[1][2]
இராணி ஓஜா Queen Oja | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | பிஜோயா சக்ரவர்த்தி |
தொகுதி | குவகாத்தி மக்களவைத் தொகுதி, அசாம் |
மாநகரத்தந்தை குவகாத்தி | |
பதவியில் 1996-1997 | |
முன்னையவர் | கேமபிரபா சைகியா |
பின்னவர் | சோனாதர் தாசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 நவம்பர் 1950 குவகாத்தி, அசாம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | அசாம் கண பரிசத் |
வேலை | தொழிலதிபர் |
தொழில் | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "New mayor assumes charge - Talukdar pledges to concentrate on cleanliness, water supply & funds for new schemes". The Telegraph. 13 May 2005. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ "BJP's Lok Sabha polls first list: PM Narendra Modi to contest from Varanasi, Amit Shah from Gandhinagar". New Indian Express. 21 March 2019. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]