பிஜோயா சக்ரவர்த்தி

இந்திய அரசியல்வாதி

பிஜோயா சக்ரவர்த்தி (Bijoya Chakravarty) (பிறப்பு: அக்டோபர் 7, 1939), பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2][3][4]

பிஜோயா சக்ரவர்த்தி
ஆகஸ்ட் 2015இல் பிஜோயா சக்ரவர்த்தி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
16 மே 2009 – 23 மே 2019
முன்னையவர்கிரிப் சாலிகா
பின்னவர்இராணி ஓஜா
பதவியில்
13 மே 1999 – 13 மே 2004
முன்னையவர்புவனேசுவர் காலிதா
பின்னவர்கிரிப் சாலிகா
தொகுதிகுவகாத்தி
மத்திய நீர்வளத்துறை அமைச்சர்
பதவியில்
13 மே 1999 – 13 மே 2004
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1986–1992
தொகுதிஅசாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 அக்டோபர் 1939 (1939-10-07) (அகவை 85)
பாலிகான், ஜோர்ஹாட், அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஜிதன் சக்ரவர்த்தி (திருமணம் 1 ஜூன் 1965)
பிள்ளைகள்2 (சுமன் ஹரிப்பிரியா உட்பட்)
வாழிடம்குவகாத்தி
முன்னாள் கல்லூரிகுவகாத்தி பல்கலைக்கழகம் (முதுகலை), பனாரசு இந்து பல்கலைக்கழகம்
இணையத்தளம்Profile

பின்னணி

தொகு

பிஜோயா தனது அரசியல் வாழ்க்கையை ஜனதா கட்சியில் தொடங்கினார். பின்னர் இவர் பிராந்திய அசாம் கண பரிசத் கட்சியில் சேர்ந்தார். 1986 முதல் 1992 வரை மாநிலங்களவையில் பணியாற்றிய பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

13வது மக்களவையில் குவகாத்தி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1999ஆம் ஆண்டில் முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்தத் தொகுதியில் வென்றார். வாஜ்பாய் அரசின் முதல் பதவி காலத்தில், மத்திய நீர்வளத் துறை அமைச்சராக பணியாற்றினார். 2004ஆம் ஆண்டில், பாஜக இவரது இடத்தில் பாடகர் பூபன் ஹசாரிகாரை களமிறக்க முடிவு செய்தது. இது பாரதிய ஜனதா கட்சி ஊழியர்களிடமிருந்து பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் ஹசாரிகா தோல்வியடைந்தார். பாரதிய ஜனதா கட்சி தனது தவறைப் புரிந்து கொண்டு, 2009 மக்களவைத் தேர்தலில் பிஜோயாவை குவுகாத்தி தொகுதியில் இருந்து மீண்டும் பரிந்துரைத்தது. இதன் விளைவாக, 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாஜகவை பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிஜோயா, பி.கே. தாகூர்-முகியாதா தாகூர் தம்பதியினருக்கு 1939 அக்டோபர் 7 அன்று அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தின் பாலிகான் கிராமத்தில் பிறந்தார்.[1] குவகாத்தி பல்கலைக்கழகம், பனாரசு இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.[1] இவர் ஜிதன் சக்ரவர்த்தி என்பவரை ஜூன் 1, 1965 இல் மணந்தார்.[1] இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரது மகள் சுமன் ஹரிப்ரியா 2016ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில் ஹஜோ சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]

இறப்பு

தொகு

பிஜோயா சக்ரவர்த்தி, மே 2017 இல் தனது 49 வயதில் இறந்தார்.[7]

வகித்த பதவிகள்

தொகு
  • 1977-1979 மாவட்ட செயலாளர், ஜனதா கட்சி, மங்கல்தோய் (அசாம்)
  • 1986-1992 நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
  • 1999-2004 நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
  • 1999-2004 மத்திய நீர்வளத்துறை அமைச்சர்
  • 2007 - தற்போதைய தேசியத் துணைத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Chakravarty, Smt. Bijoya". Archived from the original on 1 June 2013. பார்க்கப்பட்ட நாள் 7 January 2013.
  2. "Padma Awards 2021 announced". Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.
  3. "Shinzo Abe, Tarun Gogoi, Ram Vilas Paswan among Padma Award winners: Complete list". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 January 2021. https://timesofindia.indiatimes.com/india/shinzo-abe-tarun-gogoi-ram-vilas-paswan-among-padma-award-winners-complete-list/articleshow/80453596.cms. 
  4. "Padma Bhushan for Tarun Gogoi". Assam Tribune. 25 January 2021. https://assamtribune.com/padma-bhushan-for-tarun-gogoi/. 
  5. "Exclusive: Cabinet Portfolio Names for BJP-led Govt in Assam" (in en). TheQuint. 21 May 2016. https://www.thequint.com/news/politics/exclusive-cabinet-portfolio-names-for-bjp-led-govt-in-assam. 
  6. "Fathers & sons, husbands & wives and a mother in place of daughter, all in one Congress poll family" (in en). The Indian Express. 18 March 2016. https://indianexpress.com/article/elections-2016/india/india-news-india/kerala-elections-congress-candidates/. 
  7. "Bijoya Chakravarty bereaved" இம் மூலத்தில் இருந்து 10 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180110054917/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=may3117%2Fcity057. 

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜோயா_சக்ரவர்த்தி&oldid=3360380" இலிருந்து மீள்விக்கப்பட்டது