இராணி துங்கா
இராணி துங்கா (Rani Dhunga), முன்னர் சீதா பைலா ("சீதாவின் கால்தடங்கள்") என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் பெல்லிங் நகரின் வடகிழக்கில் 6 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இமயமலையில் புனிதமானதாகக் கருதப்படும் ஓர் பெரிய பாறைப் பகுதி ஆகும். இப்பாறை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680மீ (8792 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[1]
சுற்றுப்பகுதிகள்
தொகுஇராணி துங்கா சூலை 17, 2016 அன்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் "கலப்பு பாரம்பரிய" தளம் ஆகும். இதனைச் சுற்றியுள்ள காடுகளின் வழியாகச் செங்குத்தான மலைப்பாதையில் நடந்து இராணி துங்காவை அடையலாம். கஸ்தூரி மான், இமயமலை வரையாடு, காட்டுப்பன்றி, இமயமலை கருப்புக் கரடி மற்றும் இமயமலை நீல செம்மறி போன்ற விலங்குகள் இந்த காட்டில் காணப்படுகின்றன. இராணி துங்காவிற்குச் செல்லும் வழியில் சங்க சோலிங் மடாலயம் உள்ளது. இது 17ஆம் நூற்றாண்டில் லாமா லட்சுன் செம்போவால் நிறுவப்பட்டது. வடகிழக்கு இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ள பழமையான மடங்களில் இதுவும் ஒன்று. இது "குஹ்யமந்த்ரா போதனைகள்" அல்லது "இரகசிய மந்திர போதனைகள்", வச்சிரயான பௌத்தத்திற்கு ஒத்ததாக அறியப்படுகிறது.[2]
சொற்பிறப்பியல்
தொகுநாட்டுப்புறக் கதைகளின்படி, "இராணி துங்கா" என்ற பெயர் "இராணியின் பாறை" ("இராணி" என்றால் "இராணி" மற்றும் "துங்கா" என்றால் "பாறை" அல்லது "கல்" என்று பொருள்).
புராணக்கதைகள்
தொகுஇந்த பெரிய பாறையுடன் தொடர்புடைய புராணம் என்னவென்றால், சீதா தேவி (இராமர்) ஒருமுறை பாறையின் மீது காலடி எடுத்து வைத்தார், அவளுடைய கால்தடங்கள் இதில் பதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
மற்றொரு நாட்டுப்புற புராணக்கதை என்னவென்றால், நீண்ட காலத்திற்கு முன்பு நேபாளம் அல்லது பூட்டான் இராச்சியம் தாக்கப்பட்டபோது சிக்கிம் இராணி இந்த இடத்தில் மறைந்திருக்கும் குகையாக இருந்தது என்பதாகும்.
காலநிலை
தொகுஇப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை பருவமழை காலநிலையாகும். அதிகபட்ச வெப்பநிலை 24° செண்டிகிரேடாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 0° செண்டிகிரேடாகவும் பதிவாகியுள்ளது. குளிர்காலத்தில் இமயமலைத் தொடர்களிலிருந்து நேராகக் குளிர்ந்த காற்று வீசுகிறது, சில சமயங்களில் பனியும் ஆலங்கட்டி மழையும் இதனால் பெய்வதுண்டு.
படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rani Dhunga Jungle Trek, Pelling" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.
- ↑ "Pelling - Ranidhunga day hike". Smile Panda Tours (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.