இராணி பல்பீர் கவுர்
இராணி பல்பீர் கவுர் (Rani Balbir Kaur) என்பவர் இந்தியாவில் வாழும் ஒரு பஞ்சாபி நாடக ஆளுமை ஆவார்.[1] பஞ்சாபி நாடகத்தின் முதல் பெண் இயக்குனர்களில் ஒருவரான கவுர், 1972-ல் தனது நாடக வாழ்க்கையைத் தொடங்கினார். இதன் பின்னர் பஞ்சாபி நெறிமுறைகளை மேடையில் நாடகமாகக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார். சூபி காவியங்களை முழு நீள நாடகங்களாக மறுகட்டமைத்த முதல் நபர் கவுர் ஆவார். மகாராஜா ரஞ்சித் சிங்கின் கடைசி அரசியான இராணி ஜிந்தன் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவின் பிராட்வேயில் நடித்த முதல் பஞ்சாபி நடிகையும் இவரே ஆவார். ஹயவதன், ஆன்டிகோன், சாஹிபன், ராணி ஜிந்தன், காசி ராம் கோட்வால், மஹியா மேரா தானேதர் மற்றும் வக்த் நே கியா க்யா ஹசின் சிதும் ஆகியவற்றில் இவரது அற்புதமான நடிப்பு வெளிப்பட்டது.[2]
குருநானக் நாடகம்
தொகுகுருநானக்கின் பயணங்களை, பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட மேரே நானக்குடன், மக்களை ஈர்க்கும் வகையில் காணொலி காட்சியாக வழங்கினார். பிரபல நாடக நடிகரும், இயக்குநருமான கவுருடன் இணைந்து இதனை குருநானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு, பிடிசி அலைவரிசையில் வழங்கினார். இதனை யூடியூப்பிலும் காணலாம்.[3]
விருதுகள்
தொகு2015-ல், இராணி பல்பீர் கவுர் சங்கீத நாடக அகாதமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sangeet Natak Akademi Award for Rani Balbir Kaur, Pammi Bai" (in en). hindustantimes.com/. 2016-04-25. http://www.hindustantimes.com/punjab/sangeet-natak-akademi-award-for-rani-balbir-kaur-pammi-bai/story-f22gWvipP8ztZebXfx3PEP.html.
- ↑ "Sangeet Natak Akademi Award for Rani Balbir Kaur, Pammi Bai". Hindustan Times (in ஆங்கிலம்). 2016-04-25. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
- ↑ "Mere Nanak is theatre actor and director Rani Balbir Kaur's tribute to Guru Nanak". The Indian Express (in ஆங்கிலம்). 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.