இராதா பாதல்

நேபாள செவிலியர்

இராதா பாதெல் (Radha Paudel) (29 திசம்பர் 1973,பள்ளி பதிவுகளின்படி) நேபாளத்தின் மங்கள்பூரில் பிறந்த இவர் சித்வன் மாவட்டம் கௌரிகஞ்ச் பகுதியில் வளர்ந்தார். பாகுபாடு, தவறாகப் பயன்படுத்துதல், வன்முறை பற்றிய இவரது குழந்தை பருவ அனுபவங்கள் ஒரு மனிதாபிமான ஆர்வலர், செவிலியர், எழுத்தாளர் என்ற வகையில் பாலின நீதிக்கு ஆதரவாக பேச ஊக்குவித்தது. மாதவிடாய் கட்டுப்பாடு, வன்முறைகள், ஆகியவற்றிலிருந்து இவர் தப்பித்தார். தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாக இருப்பவர்களுக்காக, குறிப்பாக நேபாளத்தில் உள்ள இளம் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் குரல் கொடுக்க தனது நேரத்தை அர்ப்பணிக்கிறார். இராதா பாதெல் தனது வேலையின் மூலம் கல்வி, அதிகாரம் மற்றும் விடுதலை ஆகியவற்றை வெளிப்படையாகப் பயன்படுத்துகிறார்.

இராதா பாதல்
நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள ராதா பாடெல், நார்வேஜியன் ஏஜென்சி ஃபார் டெவலப்மென்ட் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசுவதற்காக சென்றார்
நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள ராதா பாடெல், நார்வேஜியன் ஏஜென்சி ஃபார் டெவலப்மென்ட் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசுவதற்காக சென்றார்
பிறப்பு29 திசம்பர் 1973 (1973-12-29) (அகவை 50)
சித்வன் மாவட்டம், நேபாளம்
தொழில்செவிலியம், மயக்கவியல், எழுத்தாளர்
மொழிநேபாள மொழி ஆங்கிலம்
தேசியம்நேபாளி
கல்விசுகாதார கல்வி, சமூகவியல், மேம்பாட்டு மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை
கல்வி நிலையம்திரிபுவன் பல்கலைக்கழகம்
வகைசமுதாய வளர்ச்சி
கருப்பொருள்மாதவிடாய் காலத்தில் பெண்களின் பாகுபாடுகளை எதிர்த்தல், ஏழைகளிடையே வாழ்க்கை மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Jumla: A Nurse's Story
இணையதளம்
www.radhapaudel.org

தான் தனிப்பட்ட முறையில் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் போன்ற அனுபவங்களை அனுபவிக்கும் மற்றவர்களுக்கு உதவ இவர் முன் வந்தார். இதற்காக ஒரு ஆய்வை நடத்தினார். மேலும், பொது போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பிரச்சாரத்தை 2011இல் வழிநடத்தினார்.[1] பேரழிவு தரும் பூகம்பத்தின் போது தன்னார்வலர்களை தீவிரமாக ஈடுபடுத்தி, அவர்களை வழிநடத்தினார் [2] 2011 இல் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுத்திற்கு எதிரான இயக்கத்தை நடத்தினார். 2015/2016இல் நேபாளத்தையும் அதன் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்த ஒரு பொருளாதார முற்றுகையால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நேபாளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்றார். [3] தொடர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே சப்தாரி மற்றும் சிராஹாவில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.[4] இவர் ஒரு மக்கும் விடாய்க்கால அணையாடை தொழிற்சாலையையும் மேற்பார்வையிடுகிறார். இவர் பல முன்னணி நிறுவனங்களுடன் நிறுவனராகவும், நிர்வாகியாகவும், ஆலோசகராகவும் பணிபுரிந்தார். இவர் சில நிறுவனங்களில் 2010 முதல் 2016 வரை முழுநேர நிறுவனர்/தலைவராக பணியாற்றினார். 2016 இல் இராதா பாதல் அறக்கட்டளைக்கு வேலை செய்யத் தொடங்கினார்.[5] 2016 இல் இவரது மருமகள் திருமதி அனுபா ரெக்மியால் நிறுவப்பட்டது. [6]

இவர் வாழ்நாள் முழுவதும் சந்தித்த சவால்களால் ஈர்க்கப்பட்டு, கண்ணியமான மாதவிடாய்க்கான உலகளாவிய தெற்கு கூட்டணிக்கான உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கினார்.[7] இவர் கண்ணியமான மாதவிடாய் இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்தார் (மாதவிடாய் காலத்தில் கண்ணியம்).

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் மறைந்த செல்வி கங்கா மாயா மற்றும் திரு தேவி பிரசாத் பாதலின் நான்காவது மகள். இவர் 2009இல் தனது தாயின் சடலத்திற்கு தீ மூட்டினார் (இந்துக்கள் கடைபிடிக்காத ஒரு நடவடிக்கை). 1999ஆம் ஆண்டில் தனது கண்களையும், 2016ஆம் ஆண்டில் தனது உடலையும் மருத்துவப் பள்ளிகளுக்கும் தானம் செய்வதாக அறிவித்தார்.

கல்வி

தொகு

இவர் நேபாளத்தின் பொகாராவில் ஒரு மயக்கவியல் நிபுணத்துவம் பெற்ற ஒரு செவிலியராக இருந்தார். இவர் சமூக சுகாதார செவிலியத்தில் இளங்கலை (2000), சுகாதாரக் கல்வியில் முதுகலை (2001), சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் (2003). நேபாளத்தில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழகத்திலும், ஆசிய மேலாண்மை நிறுவனத்திலும் (2010) மேம்பாட்டு மேலாண்மை முதுகலைப் பெற்றார்.

விருதுகளும் அங்கீகாரமும்

தொகு

2020ஆம் ஆண்டில், ஆசிய மேலாண்மை நிறுவனத்திடமிருந்து மூன்று 'ஏ' விருதைப் பெற்றார். இவர் தனது கலங்கம ஹமலா புத்தகத்திற்காக மதன் இலக்கிய பரிசை (2014) பெற்றார். இவர் இந்த விருதைப் பெற்ற மூன்றாவது பெண்ணாவார். இவர் நேபாள அரசாங்கத்திடமிருந்து இளைஞர் கண்டுபிடிப்பு விருது 2014 ஐப் பெற்றார். நேபாள அரசாங்கத்தில் நிரந்தர பதவி உட்பட பல உயர் பதவிகளை விட்டுவிட்டு, நெகிழ்ச்சியான சமூகங்களை உருவாக்குவதற்கான இவரது தொடர்ச்சியான முயற்சியால், இவர் N- அமைதி விருது மற்றும் பெண்கள் அமைதி உருவாக்குபவர் (2012) பெற்றார். [8]

மேற்கோள்கள்

தொகு
  1. Paudel, Radha. "Gender and Public Transport: Kathmandu, Nepal" (PDF). World Bank.
  2. "Radha Paudel: #EarthquakeInNepal April 2015: Reflections". Radha Paudel. 2016-01-13. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  3. "Radha Paudel: #teraiblockade, #Madhesh Movement,#peacevigils: A Ground Reality". Radha Paudel. 2015-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  4. "Radha Paudel". radhapaudelfoundation.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  5. "Radha Paudel Foundation – Radha Paudel Foundation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
  6. "Board Member – Radha Paudel Foundation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
  7. "Global South Coalition For Dignified Menstruation : 28 May 2020 - May Conference 2020". Global South Coalition For Dignified Menstruation : 28 May 2020 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
  8. "Women PeaceMakers Alumni Database - Joan B. Kroc Institute for Peace and Justice - Joan B. Kroc School of Peace Studies - University of San Diego". www.sandiego.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதா_பாதல்&oldid=3278428" இலிருந்து மீள்விக்கப்பட்டது