இராபர்ட்டோ ஆபிரகாம்
இராபர்ட்டோ ஆபிரகாம் (Roberto Abraham), (பிறப்பு: 12 ஏப்பிரல் 1965, மணிலா, பிலிப்பைன்சு) ஒரு கனடிய வானியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் கனடிய அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்]].
இராபர்ட்டோ ஆபிரகாம் Roberto Abraham | |
---|---|
பிறப்பு | 12 ஏப்ரல் 1965 |
துறை | வானியல், வானியற்பியல், அண்டவியல் |
பணியிடங்கள் | டொராண்டோ பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பிரித்தானியக் கொலம்பியப் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | பிஎல் லாக் (BL Lac) பொருள்களைப் படம்பிடித்தல் (1992) |
ஆய்வு நெறியாளர் | இயான் மெக்கார்தி, உரோசர் தேவீசு (வானியற்பியலாளர்) |
அறியப்படுவது | நோக்கீட்டு அண்டவியல், பால்வெளிப் படிமலர்ச்சி, முதற் பால்வெளிகள் |
இணையதளம் www |
கல்வி
தொகுஆபிரகாம் 1987 இல் தன் இளம் அறிவியல் பட்டத்தைப் பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்த்ல் இருந்து பெற்றார்,இவர் தன் முனைவர்பட்டத்தை 1992 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். இவரது ஆய்வு வழிகாட்டிகள் இயான் எம். மெக்கார்த்தியும் உரோசர் டேவீசும் ஆவர்.[1]
இவர் தன் முதுமுனைவர் பட்டத்தை தொமினியன் வானியற்பியல் நோக்கீட்டகத்திலும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலும் அரசு கிரீன்விச் நோக்கீட்டகத்திலும் ஆய்வு செய்து பெற்றார்.[1]
தொழில்
தொகுஇவரது வாழ்க்கை அளவன்சாரா புள்ளியியல் முதல் பால்வெளி புறவடிவ வகைபாடு, குறிப்பாக உயர்செம்பெயர்ச்சி நெடுக்கத்திலான வகைபாடு வரையிலும் தொடக்கநிலை ஆழ்வெளிப் புலங்களின் ஆய்வுக்காகவும் பெயர்பெற்றதாகும். [2] இவர் "ஜெமினி ஆழ்வெளி ஆய்வில்" தலைமையாளர்களில் ஒருவர் ஆவார்.[3] இது மிகத் தொடக்கநிலை நீள்வட்ட பால்வெளிகளின் படிமலர்ச்சி உள்ளங்கிய பல குறிப்பிடத் தக்க முடிவுகளுக்கு வழிவகுத்தது. அவற்றில் பெரும்பாலாவை ஏன் மிகப் பழையனவாக அமைகின்றன என்பதற்கு விளக்கமும் தந்தது.[4]
இவர் நடப்பில் டிரேகான்பிளை தொலையொளிப்பட அணித் தொலைநோக்கியின் இணை முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக உள்ளார். இது மீவிரவல் பால்வெளிகளை அதாவது, மீத்தாழ் மேற்பரப்புப் பொலிவு பால்வெளிகளைக்கட்புல ஒளி அலைநீளங்களில் படிமமாக்குகிறது.[5]
இவர் 2016 முதல் 2018 வரை கனடிய வானியல் கழகத் தலைவராக இருந்தார்.[6] இவர் நடப்பு ஜேம்சு வெபு விண்வெளித் தொலைநோக்கி அறிவுரைக்குழுவில் பங்கேற்று வானியல் சமுதாயத்துக்குப் பணிபுரிகிறார்[7] இவர் கனடிய அரசு வானியல் கழகத்தின் தகைமைத் தலைவராகவும் விளங்கினார்.[8]
தகைமைகளும் விருதுகளும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Abraham's departmental biography page
- ↑ Galaxy morphology to I=25 mag in the Hubble Deep Field, 1996, MNRAS, 279 L47
- ↑ Gemini Observatory - the Gemini Deep Deep Survey
- ↑ Casey Kazan; The early universe puzzle[தொடர்பிழந்த இணைப்பு], The Daily Galaxy (June 15th 2011).
- ↑ "Dragonfly - Dunlap Institute" (in en-US). Dunlap Institute. http://www.dunlap.utoronto.ca/instrumentation/dragonfly/.
- ↑ "Past Officers and Directors of the Society - CASCA". casca.ca (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
- ↑ "JWST Advisory Committee (JSTAC)". jwst.stsci.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
- ↑ "RASC Toronto Centre Organization | RASC Toronto". rascto.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
- ↑ "OTA: Recipients — Site". www.artsci.utoronto.ca (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
- ↑ "Martin Award - CASCA". casca.ca (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
- ↑ "U of T's Abraham becomes new Fellow of the Royal Society of Canada - Dunlap Institute" (in en-US). Dunlap Institute. http://www.dunlap.utoronto.ca/u-of-ts-abraham-becomes-new-fellow-of-the-royal-society-of-canada/.
- ↑ "FELLOWS DIRECTORY | The Royal Society of Canada". rsc-src.ca. பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.
- ↑ "Roberto Abraham - using the Dragonfly Array telescope for new discoveries | Killam Laureates". killamlaureates.ca. பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.