இராபர்ட் ஜூலியசு டிரம்பிளர்
இராபர்ட் ஜூலியசு டிரம்பிளர் (Robert Julius Trumpler) ( 1915 வரை இராபர்ட் டிரம்பிளர், பிறப்பு: அக்தோபர் 2, 1886, சூரிச், சுவிட்சர்லாந்து; இறப்பு: செப்டம்பர் 10, 1956, பெர்க்கேலி, ஐக்கிய அமெரிக்கா) ஒரு சுவீடந்அமெரிக்க வானியலாளர் ஆவார்.
இராபர்ட் ஜூலியசு டிரம்பிளர் Robert Julius Trumpler | |
---|---|
பிறப்பு | 2 அக்டோபர் 1886 சூரிக்கு |
இறப்பு | 10 செப்டெம்பர் 1956 (அகவை 69) பெர்க்லி |
படித்த இடங்கள் | சூரிக் பல்கலைக்கழகம், University of Göttingen |
பணி | வானியல் வல்லுநர் |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | வானியல் |
நிறுவனங்கள் |
|
முனைவர் பட்ட மாணவர்கள் | Harold F. Weaver |
வாழ்க்கைப்பணி
தொகுபள்ளிப் படிப்பு முடிந்த்தும் டிரம்பிளர் சூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் பிறகு கோட்டிங்டன் பல்கலைக்கழகத்துக்கு மாறினார். இங்கு இவர்1910 இல் தன் முனைவர் பட்ட்த்தைப் பெற்றார். 1915 இல் முதல் உலகப்போரின்போது, ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவர் முதலில் அலெகனி வான்காணகத்தில் சேர்ந்து பின்னர் இலிக் வான்காணகத்துக்கு மாறினார். 1921 இல், அமெரிக்கவின் இயல்பான குடிமகனாக மாறினார். இவர் 1932 இல் அமெரிக்க தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[1]
இவர் மிகத் தொலைவாக அமைந்த திறந்த பால்வெளிக் கொதுகளின் பொலிவை அலந்து எதிபார்த்த்தைவிடக் குறைவாகவும் அவற்றின் விண்மீன்கள் கூடுதலாகச் சிவப்பாகத் தோன்றுவதையும் கண்டார். இந்நிலையை பால்வெளிகளுக்கிடையே உள்ள உடுக்கணவெளித் தூசுகள் அவற்றின் ஒளியை பால்வெளியூடே சிதறச் செய்வதால் உருவாவதாக விளக்கினார். அதாவது பால்வெளி ஊடகம் ஒளியை உறிஞ்சுவதால் ஏற்படுகிறது என்றார்.[2]
இவர் நமது பால்வழிப் பால்வெளியின் உருவளவை அளக்க, இவர் மேலும் திறந்த பால்வெளிக் கொத்துகளை ஆழமான ஆய்வால் விரிவாக அட்டவணைப் படுத்தினார். இவர் இந்த ஆய்வு சூரியன் நடுவில் உள்ளபடி, பால்வழியின் விட்டத்துக்கான மேல்வரம்பை பத்தாயிரம் பார்செக்காக அறுதியிடும் என முதலில் நினைத்தார். பின்னர் இதை இவர் திருத்திக்கொண்டார். திறந்த கொத்துகளை அட்டவணைப்படுத்தும்போது, அவற்றை அவற்றில் அமைந்த விண்மீன்களின் எண்ணிக்கையை வைத்தும் விண்மீன்களின் மையச் செறிவையும் தோற்றப் பொலிவையும் வைத்தும் வகைபடுத்துவதற்கான ஏற்பாடொன்றையும் உருவாக்கினார். இம்முறை டிரம்பிளர் வகைபாடு எனப்படுகிறது.,[3] இது இன்றும் நடைமுறையில் உள்ளது.
தகைமைகள்
தொகுபசிபிக் வானியல் கழகம் வானியலில் மிக அரிய முனைவர் ஆய்வுரையைத் தரும் வானியலாளருக்கு இவரது நினைவாக இராபர்ட் ஜே. டிரம்பிளர் விருதை நிறுவி வழங்கி வருகிறது.[4]
பின்வரும் வானியல் கூறுகளும் பொருள்களும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன:
- நிலாவின் டிரம்பிளர் குழிப்பள்ளம்.
- செவ்வாயின் டிரம்பிளர் குழிப்பள்ளம்.
- திறந்த பால்வெளிக் கொத்துகளின் வகைபாடு டிரம்பிளர் வகைபாடு என வழங்குகிறது.
- இவர் தொகுத்த திறந்த பால்வெளிக் கொத்துகளின் அட்டவணை டிரம்பிளர் அட்டவணை எனப்படுகிறது.
தேர்ந்தெடுத்த வெளியீடுகள்
தொகு- R.J. Trumpler, 1930. Preliminary results on the distances, dimensions and space distribution of open star clusters. Lick Obs. Bull. Vol XIV, No. 420 (1930) 154-188. Table 16 is the Trumpler catalog of open clusters, referred to as "Trumpler (or Tr) 1-37
- Robert Julius Trumpler, Harold F. Weaver 1962. Statistical Astronomy (Dover Publications, New York). (reprinted from original published by the University of California, Berkeley, 1953)
மேற்கோள்கள்
தொகு- ↑ http://books.nap.edu/openbook.php?record_id=9977&page=294
- ↑ R.J. Trumpler, 1930. Preliminary results on the distances, dimensions and space distribution of open star clusters. Lick Obs. Bull. Vol XIV, No. 420 (1930) 154-188. Table 16 is the Trumpler catalog of open clusters, referred to as "Trumpler (or Tr) 1-37
- ↑ Robert A. Garfinkle. Star-Hopping: Your Visa to Viewing the Universe. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-59889-7; p.74
- ↑ Robert J. Trumpler Award for an Outstanding PhD Thesis.[தொடர்பிழந்த இணைப்பு] Astronomical Society of the Pacific. Accessed September 7, 2008.
- National Academy of Sciences biography - Biographical Memoirs V.78 (2000) பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம் pp. 276–297
- The Munich Astro Archive – Robert Julius Trumpler (October 2, 1886 - September 10, 1956) பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- The Interstellar Medium: Dust
- "LAUDS ASTRONOMY ON '35 DISCOVERIES; Dr. Shapley Lists Outstanding Developments of the Year in a Talk at Cambridge.". The New York Times: pp. Page 24. October 20, 1935. http://select.nytimes.com/gst/abstract.html?res=F10612FB3C5B1B7B93C2AB178BD95F418385F9&scp=1&sq=Julius%20Trumpler&st=cse. பார்த்த நாள்: 2008-09-05. "... perhaps, among the high lights of 1935 the preliminary results announced by Trumpler (Dr. Robert Julius Trumpler) of the Lick Observatory on his test of ..."
மேலும் படிக்க
தொகு- Weaver, Harold; Weaver, Paul (August 1957). "Robert Julius Trumpler, 1886-1956". Publications of the Astronomical Society of the Pacific (Astronomical Society of the Pacific) 69 (409): 304. doi:10.1086/127076. Bibcode: 1957PASP...69..304W.