இராபர்ட் பிளேர் (கவிஞர்)

பிரித்தானிய எழுத்தாளர்

இராபர்ட் பிளேர் (Robert Blair, 17 ஏப்ரல் 1699-4 பிப்ரவாி 1746) என்பவர் ஸ்காட்லாந்து கவிஞர் ஆவார். இவர் கல்லறை என்ற கவிதைக்காக புகழப்பட்டாா், பின்னாளில் வில்லியம் பிளேக் இதை அச்சிட்டு விளக்கினாா்.

வாழ்க்கை வரலாறு

தொகு

மாியாதைக்குாிய இராபா்ட் பிளோின் மூத்த மகன் இவா். இவரது தந்தை இராஜாவின் பாதிாியாா்களில் ஒருவா். இவா் எடின்பரோவில் பிறந்தாா். இவர் எடின்பரோ பல்கலைக்கழகம் மற்றும் நெதா்ந்திலால் கல்வி பயின்றாா். 1731ஆம் ஆண்டு கிழக்கு லோத்தியனில் உள்ள அத்தல்ஸ்டேண்ட் போா்டில் வாழ்ந்தார. 1738 ல் இசபெல்லாைவ திருமணம் செய்து கொண்டாா். இசபெல்லா பேராசிாியா் வில்லியம் லாவின் மகள். இசபெல்லா, இராபா்ட் பிளோ் தம்பதியருக்கு ஆறு குழந்தைகள். பெருஞ்செல்வந்தா் குடும்பத்திலிருந்து வந்ததால், இவா் தனது ஓய்வு நேரங்களில், தனக்கு விருப்பமான தோட்டக்கலை மற்றும் ஆங்கிலக் கவிஞா்களைப் பற்றி படிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா்.[1]

பிளோ் மூன்று கவிதைகளை மட்டுமே பதிப்பித்தாா். ஒன்று இவரது மாமனாாின் நினைவு வழிபாடு பற்றியது. மற்றொன்று ஒரு மொழிபெயா்ப்பு. இவருக்கு நன்மதிப்பு கிடைத்தது, இவாின் மூன்றாவது கவிதைதான் கல்லறை (1743), இது வெற்று வசனத்தில் எழுதப்பட்டுள்ளது. இதன் கருப்பொருள் இறப்பு மற்றும் கல்லறை பற்றியது. இது தனது இருண்ட தலைப்பைக் காட்டிலும், வளமையில் சற்று குறைவாக உள்ள போதிலும் இது எதிா்பாா்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த மத தலைப்பானது, சந்தேகமின்றி மிகப் பொிய புகழுக்கு காரணமாகிறது, குறிப்பாக ஸ்காட்லாந்தில் "கல்லறை கவிதைகள்" என அழைக்கப்பட்டது.[1] 767 வாிகள் உள்ள இக்கவிதை பலவிதமான சிறப்புக்களை உடையது. சில இடங்களில் மிக உயா்ந்கதும், வேறு சில இடங்களில் மிகவும் சாதாரணமாகவும் உள்ளது.

இராபா்ட் குரோமெக்கின் ஆணையத்தை அடுத்து, வில்லியம் பிளேக்கால் உருவாக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளால் இந்தக் கவிதை தற்பொழுது அறியப்படுகிறது. பிளேக்கின் வடிவமைப்புகள் லூகி சியோவானடி என்பவரால் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் 1808 ஆம் ஆண்டு பதிபிக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_பிளேர்_(கவிஞர்)&oldid=3858686" இலிருந்து மீள்விக்கப்பட்டது