இராபர்ட் மேத்யூசு (தடகள வீரர்)

இராபர்ட் மேத்யூஸ் (Robert Matthews) (பிறப்பு: 1961 மே 26 - இறப்பு: 2018 ஏப்ரல் 11) இவர் ஓர் பிரித்தானிய விளையாட்டு வீரராவார். பார்வைக் குறைபாடுள்ள இவர் நடுத்தர போட்டிகளிலும், நீண்ட தூர நிகழ்வுகளிலும் போட்டியிட்டார். ஏழு இணை ஒலிம்பிக் போட்டிகளில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்ற இவர், ஒரு "சின்னமான தடகள வீரர்" என்று குறிப்பிடப்படுகிறார்.

இராபர்ட் மேத்யூசு
பிரிட்டிசு பேரரசின் ஆணைக்குழு உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு(1961-05-26)26 மே 1961
இசுஸ்ட்ரூட், இங்கிலாந்து
இறப்பு11 ஏப்ரல் 2018(2018-04-11) (அகவை 56)
ஓக்லாந்து
விளையாட்டு
நாடு ஐக்கிய இராச்சியம்
விளையாட்டுஇணை ஒலிம்பிக் தடகளப்போட்டிகள்
மாற்றுத்திறன் வகைப்பாடுபி1 / டி11 வகைப்பாடுகள்
பதக்கத் தகவல்கள்
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
நாடு  பெரிய பிரித்தானியா
தங்கப் பதக்கம் – முதலிடம் 1984 இசுடோக் மான்டேவில்லி
/ நியூ யார்க்கு
ஆண்கள் 800 மீ பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1984 இசுடோக் மான்டேவில்லி
/ நியூ யார்க்கு
ஆண்கள் 1,500 மீ பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1984 இசுடோக் மான்டேவில்லி
/ நியூ யார்க்கு
ஆண்கள் 5,000 மீ பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1988 சியோல் ஆண்கள் 8,00 மீ பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1988 சியோல் ஆண்கள் 1,500 மீ பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1988 சியோல் ஆண்கள் 5,000 மீ பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1992 பார்செலோனா ஆண்கள் 5,000 மீ பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 2000 சிட்னி ஆண்கள் 10,000 மீ டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1992 பார்செலோனா ஆண்கள் 8,00 மீ பி1
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1996 அட்லான்டா ஆண்கள் 1,500 மீ டி10
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2000 சிட்னி ஆண்கள் 5,000 மீ டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2000 சிட்னி ஆண்கள் மாரத்தான் டி11
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1992 பார்செலோனா ஆண்கள் 1,500 மீ பி1

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் இங்கிலாந்தின் கென்டில் பிறந்தார்.[1] இவருக்கு தனது தந்தையிடமிருந்து மரபணு ரீதியாக கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது.[2] இவருக்கு 11 வயதாக இருந்தபோது இவரது பார்வையில் குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்படத் தொடங்கின.[3] மேலும்,18 வயதிற்குள் தனது பார்வையை முற்றிலும் இழந்துவிட்டார். இவர் 13 வயதிலிருந்தே ஓரளவு பார்வையுடன் இருக்கும்போது ஒரு பள்ளியில் பயின்றார். பின்னர், பார்வையற்றோருக்கான கல்லூரியில்] படித்தார். 1993 ஆம் ஆண்டில், பார்வையற்றோருக்கான வழிகாட்டி நாய்கள் சங்கத்தில் பணியாற்ற இவர் இலீமிங்டனுக்கு சென்றார்.

இவரது முதல் மனைவி, காத், நவம்பர் 2003இல், தனது 38 வயதில் திடீரென இறந்தார்.[4] மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் நியூசிலாந்தில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது, சாரா கெர் என்பவரைச் சந்தித்தார். அதன்பிறகு அவருடன் இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று நாட்டிற்குத் திரும்பினார்.[5][6] இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன.[1]

1987 ஆம் ஆண்டில், பிரிட்டிசு பேரரசின் ஆணைக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இணை ஒலிம்பியன் ஆனார். 2001 ஆம் ஆண்டில் வார்விக் பல்கலைக்கழகத்திலிருந்தும், 2006 இல் வொர்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்தும் இவருக்கு கலை பட்டங்களின் கௌரவ முதுகலை வழங்கப்பட்டது.[7] 2004 ஆம் ஆண்டில் பிபிசி மிட்லாண்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இவர் சேர்க்கப்பட்டார்.[8]

இவர் ஒரு விளையாட்டு-உடற்பிடிப்பு சிகிச்சையாளராகவும், ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் இருந்தார் . இவரது சுயசரிதையான ரன்னிங் பிளைண்ட் 2009 இல் வெளியிடப்பட்டது.[9] 2014 ஆம் ஆண்டின் வெளியான பிளைண்ட் ஆம்பிஷன் என்ற திரைப்படத்தின் எழுத்தளர் 1988 ஆம் ஆண்டு இணை ஒலிம்பிக்கில் மேத்யூசின் செயல் திறன் தனது கதைக்கு உத்வேகம் அளித்ததாகக் கூறினார். கண்பார்வையற்றவர் எவ்வாறு இயங்குகிறார் என்பதை நடிகர் ராப்சன் க்ரீனுக்கு இவர் உதவினார். மேலும் படத்தில் ஒரு சிறிய பாத்திரமாகவும் இருந்தார்.[10] இவருக்கு 2017இல் மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.[11] 2018 ஏப்ரல்11 அன்று இறந்தார்.[12]

விளையாட்டு வாழ்க்கை

தொகு

இவர் 1984 இல் முதன்முதலில் இணை ஒலிம்பிக்கில் இசுடோக் மாண்டேவில்லி / நியூ யார்க்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். இவர் பி 1 வகுப்பு நடுத்தர, நீண்ட தூர நிகழ்வுகளில் தொடங்கினார். 800மீ, 1,500மீ, 5,000 மீ ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சியோலில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில், இவர் மூன்று பட்டங்களையும் தக்க வைத்துக் கொண்டார். இவர் 1992இல் மீண்டும் 5,000மீட்டரை வென்றார். 800மீட்டரில் ஒரு வெள்ளியும், 1,500மீட்டரில் வெண்கலமும் பெற முடிந்தது. இது இவரது பதக்கத்தை 13 ஆகக் கொண்டு வந்தது. அவற்றில் எட்டு தங்கங்கள் அடங்கியது.[13]

இவர் 22 உலக சாதனைகளை முறியடித்தார். மேலும் ஆறு உலகப் போட்டிகள்லும், 15 ஐரோப்பியப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார்.[14] 1986 ஆம் ஆண்டில், 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு நிமிடம் பின்தங்கி இரண்டாவதாக வந்து, தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார்.[15] இணை ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலண்டன் 2012 வழிகாட்டியில் எட்டு "சின்னமான விளையாட்டு வீரர்களில்" ஒருவராக இவர் பட்டியலிடப்பட்டார்.[16]

2004 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறியதாலும், 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் விளையாட்டுக்கு தகுதி பெறத் தவறியதாலும், 1,500 மீட்டரில் புதிய நியூசிலாந்து சாதனை படைத்த போதிலும், தடகளத்திலிருந்து ஓய்வு பெற்றார்.[13][17][18] பின்னர் இவர் ஒரு புதிய விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினார். நியூசிலாந்தின் பிரதிநிதியாக இலண்டனில் நடந்த 2012 இணை ஒலிம்பிக் போட்டிகளில் பார்வை இழந்தோருக்கான மிதிவண்டி ஓட்டுதல் போட்டிகளில் பங்கேற்றார்.[19] 2009 முதல் ஒரு முத்தரப்பு வீரராக நியூசிலாந்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[12][20]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Bob Matthews aims for eighth Paralympic Games". BBC News. 29 September 2011. https://www.bbc.co.uk/sport/0/disability-sport/15112488. பார்த்த நாள்: 29 August 2012. 
  2. "Paralympics: The blind runner with a crystal-clear vision". APN Holdings NZ Limited. 24 October 2009. http://www.nzherald.co.nz/sport/news/article.cfm?c_id=4&objectid=10605075. பார்த்த நாள்: 30 August 2012. 
  3. "Athletics: 'Running is like a safety valve. It helped keep me sane and it gave me a goal'". The Independent. 18 September 2004. https://www.independent.co.uk/sport/general/athletics-running-is-like-a-safety-valve-it-helped-keep-me-sane-and-it-gave-me-a-goal-6161488.html. பார்த்த நாள்: 30 August 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Rowbottom, Mike (18 September 2004). "Athletics: 'Running is like a safety valve. It helped keep me sane and it gave me a goal'". The Independent. https://www.independent.co.uk/sport/general/athletics-running-is-like-a-safety-valve-it-helped-keep-me-sane-and-it-gave-me-a-goal-6161488.html. பார்த்த நாள்: 30 August 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Rattue, Chris (24 October 2009). "Paralympics: The blind runner with a crystal-clear vision". APN Holdings NZ Limited. http://www.nzherald.co.nz/sport/news/article.cfm?c_id=4&objectid=10605075. பார்த்த நாள்: 30 August 2012. 
  6. Cary, Tom (11 April 2018). "Robert Matthews - one of the most successful Paralympic athletes of all time - dies, aged 56". https://www.telegraph.co.uk/paralympic-sport/2018/04/11/robert-matthews-one-successful-paralympic-athletes-time/. பார்த்த நாள்: 12 April 2018. 
  7. "Coventry 2012 - Hall of Fame". Coventry City Council. Archived from the original on 13 July 2012. பார்க்கப்பட்ட நாள் 30 August 2012.
  8. "BBC Midlands Sports Awards 2004". BBC Press Office. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018.
  9. Rattue, Chris (24 October 2009). "Paralympics: The blind runner with a crystal-clear vision". NZ Herald (APN Holdings NZ Limited). http://www.nzherald.co.nz/sport/news/article.cfm?c_id=4&objectid=10605075. பார்த்த நாள்: 30 August 2012. 
  10. "Golden Leamington legend Bob retires". 24 July 2008 இம் மூலத்தில் இருந்து 12 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180412212145/https://www.leamingtoncourier.co.uk/sport/golden-leamington-legend-bob-retires-1-1059271. பார்த்த நாள்: 12 April 2018. 
  11. Cary, Tom (11 April 2018). "Robert Matthews - one of the most successful Paralympic athletes of all time - dies, aged 56". The Telegraph. https://www.telegraph.co.uk/paralympic-sport/2018/04/11/robert-matthews-one-successful-paralympic-athletes-time/. பார்த்த நாள்: 12 April 2018. 
  12. 12.0 12.1 Bob Matthews: Eight-time Paralympic champion dies at the age of 56 - BBC Sport
  13. 13.0 13.1 "Athlete Search Results - Robert Matthews". International Paralympic Committee. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Golden Leamington legend Bob retires" (in en). Leamington Spa Courier. 24 July 2008 இம் மூலத்தில் இருந்து 12 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180412212145/https://www.leamingtoncourier.co.uk/sport/golden-leamington-legend-bob-retires-1-1059271. பார்த்த நாள்: 12 April 2018. 
  15. "Paralympics: The blind runner with a crystal-clear vision". 24 October 2009. http://www.nzherald.co.nz/sport/news/article.cfm?c_id=4&objectid=10605075. பார்த்த நாள்: 30 August 2012. 
  16. "London 2012 Guide to the Paralympic Games" (PDF). London Organising Committee of the Olympic Games and Paralympic Games. 2007. p. 10. Archived from the original (PDF) on 4 September 2012. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
  17. "Bob Matthews aims for eighth Paralympic Games". BBC News. https://www.bbc.co.uk/sport/0/disability-sport/15112488. பார்த்த நாள்: 29 August 2012. 
  18. "Golden Leamington legend Bob retires" இம் மூலத்தில் இருந்து 12 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180412212145/https://www.leamingtoncourier.co.uk/sport/golden-leamington-legend-bob-retires-1-1059271. பார்த்த நாள்: 12 April 2018. 
  19. "Weir fired up for seventh London Marathon title". World Para Olympics. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  20. "Rob Matthews - Inspiring blind Olympic Gold Medalist | SpeakerLink Find the Right Speaker". Speaker Link New Zealand. Archived from the original on 13 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)