இராமதேவ சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவர்

இராமதேவ சித்தர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், பதினெட்டு சித்தர்களில் ஒருவர் ஆவார். 18 சித்தர்களில், மருத்துவத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து அதில் நிபுணத்துவம் பெற்றிருந்த ராமதேவ சித்தர் அவர்களின் ஜீவ சமாதி மதுரை அழகர்கோவிலில் அமைந்திருக்கிறது.. சித்த மருத்துவத்தின் ஞானி என அனைத்து சித்தர்களாளும் மதிக்கப்பட்டவர்.[1]

பகவான் ராம தேவர் சித்தர்
இராமதேவர் சித்தர்
(சித்த மருத்துவ ஞானி)
தேசியம்இந்தியர்
மொழிதமிழ்
முக்கிய ஆர்வங்கள்
சித்த மருத்துவம்

அமைவிடம்

தொகு
 
இராம தேவர் சித்தர்

மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மேல் மலையேற்றமாக சென்றால் பகவான் ராம தேவ சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ளது.பழமுதிர்சோலை அடுத்து ராக்காயி தீர்த்தத்திற்கு செல்வோம்.

 
ராக்காயி கோவில்

இது வரை மட்டுமே பொதுவாக மக்கள் செல்வார்கள்.ராக்காயி தீர்த்தம் அடுத்து மேலே சென்றால் வனப்பகுதியில் செல்லலாம். 2 கி.மீ பயணித்தால் மலை உச்சியில் பகவான் ராம தேவர் சித்தர் சமாதி காணலாம்.

சிறப்புகள்

தொகு
 
பகவான் ராம தேவர் சித்தர்

குறுகலான மலைப் பாதை வழியாக சென்றால் மலை உச்சியில் பகவான் ராம தேவர் சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்தை அடையலாம்.அவ்விடம் குளுமையாக இருக்கும். தியானம் செய்ய உகந்த இடம் ஆகும். மலையேற்றம் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தை தரும்.

வெளியிணைப்புகள் =

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமதேவ_சித்தர்&oldid=3876089" இலிருந்து மீள்விக்கப்பட்டது