இராமநாதன் அர்ச்சுனா

மரு. இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna, பிறப்பு: 28 சூன் 1986)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் மருத்துவரும் ஆவார். இவர் 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சைக் குழு 17இல் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2][3][4]

இராமநாதன் அர்ச்சுனா
Ramanathan Archchuna
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024 நவம்பர் 21
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராமநாதன் அர்ச்சுனா

28 சூன் 1986 (1986-06-28) (அகவை 38)
அரசியல் கட்சிசுயேச்சை
வாழிடம்சாவகச்சேரி

அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார்.[5] 2024 சூலையில், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற முறைகேடுகளையும் ஒழுங்கீனங்களையும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் அம்பலப்படுத்தியதற்காக இவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.[6] இதன் மூலம் அர்ச்சுனா ஒரு பிரபலமான நபராக அடையாளப்படுத்தப்பட்டார்.[7]

அரசியலில்

தொகு

2024 நவம்பரில் சுயேச்சைக் குழு 17 என்ற அரசியல் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். இச் சுயேட்சைக் குழு 27,855 வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தைக் கைப்பற்றியது. அக்குழுவின் முதன்மை வேட்பாளரான அர்ச்சுனா 20,487 விருப்பு வாக்குகள் பெற்று முதலாவதாக வந்து நாடாளுமன்றம் சென்றார்.[4]

இராமநாதன் அர்ச்சுனாவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் சுயேச்சை 20,487 தெரிவு[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Directory of Members: Ramanathan Archchuna". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2024.
  2. "BREAKING – Sri Lanka's NPP secures 'super majority' in parliament as it secures biggest ever win". Tamil Guardian. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  3. "Jaffna District preferential vote results released". Ada Derana. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  4. 4.0 4.1 "Newly elected MPs: Jaffna". Times Online. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  5. "Community Rallies Behind New Medical Superintendent at Chavakachcheri". english.newsfirst.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-21.
  6. "Uproar in Jaffna over transfer of Chavakachcheri Hospital director after allegations of corruption". Tamil Guardian. 21 November 2024. பார்க்கப்பட்ட நாள் 21 November 2024.
  7. mohan, sulochana ramiah (2024-07-12). "Dr. Ramanathan Leverages FB to Expose Malpractices". Ceylon Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-21.
  8. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". EconomyNext. 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாதன்_அர்ச்சுனா&oldid=4153215" இலிருந்து மீள்விக்கப்பட்டது