இராமன் ஆய்வுக் கழகம்
இராமன் ஆய்வுக் கழகம் அல்லது இராமன் ஆராய்ச்சி கழகம் (Raman Research Institute) இந்தியாவில் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு ஆய்வுக் கழகம். இக்கழகம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர். ச. வெ. இராமனால் 1948ஆம் ஆண்டில் துவங்கபட்டது.[2]
வகை | ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1948 |
பணிப்பாளர் | தரூண் சொருதீப்[1] |
மாணவர்கள் | 53 |
பட்ட மாணவர்கள் | 10 |
அமைவிடம் | , |
வளாகம் | நகரம் சார்ந்த |
இணையதளம் | இராமன் ஆராய்ச்சி கழகம் |
- வானியல் மற்றும் வானியற்பியல்[5]
- திரவ படிகம்
- கோட்பாட்டு இயற்பியல்
- ஒளியியல்
- மென் கடத்துப் பொருட்கள்[6]
வரலாறு
தொகுஅறிவியல் சம்பந்தமாக ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் நடத்த தனி ஒரு ஆய்வுக்கூடம் அல்லது கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் ராமனிடத்தில் இருந்துகொண்டிருந்தது அதற்காக ராமன் அபோதைய மைசூர் மகாராஜ்விடம் உதவி கேட்டார். மைசூர் மகாராஜாவும் உதவ முன்வந்தார். மகாராஜா அவர்கள் தற்போதைய பெங்களுருவில் மல்லேஸ்வரம் என்ற இடத்தில 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ராமனுக்கு 1934 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகம்ஆரம்பிம்பதற்காக கொடுத்து உதவினார். 1941 ஆம் ஆண்டுதான் ராமன் இந்திய அறிவியல் கழகம் மற்றும் ராமன் ஆய்வு கழகம் ஆரம்பிக்க முதல் அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால் 1948 ஆம் ஆண்டு முதல்தான் ராமன் ஆய்வுக்கழகம் செயல்பாட்டிற்கு வந்தது. ராமன் எப்போதும் அரசாங்கத்திடம் உதவி கேட்க கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு தேவையான நிதியை தனியாரிடம் இருந்து திரட்டினார். இந்திய அறிவியல் கழகம் மற்றும் ராமன் ஆய்வுக்கழகம் இரண்டிருக்கும் இறுதிவரை ராமன் அவர்களே தலைவராக இருந்து வழிநடத்தினார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Raman Research Institute https://www.rri.res.in/people.html. பார்க்கப்பட்ட நாள் 8 February 2022.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ Srikanth, B. R. (28 February 2017). "No Raman effect: How his dream died a quiet death". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/lifestyle/viral-and-trending/280217/no-raman-effect-how-his-dream-died-a-quiet-death.html.
- ↑ "Raman_Research_Institute".
- ↑ "SRO and Raman Research Institute to develop quantum technologies for ISRO's satellites". http://www.firstpost.com/tech/news-analysis/isro-and-raman-research-institute-to-develop-quantum-technologies-for-isros-satellites-4178401.html.
- ↑ "Raman_Research_Institute".
- ↑ "Raman_Research_Institute".
- ↑ "Raman Research Institute, Bangalore". www.dst.gov.in.