இராமானுஜன் கணித சங்கம்

இராமானுஜன் கணித சங்கம் (Ramanujan Mathematical Society) என்பது "அனைத்து மட்டங்களிலும் கணிதத்தை ஊக்குவிக்கும்" நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட நபர்களின் இந்திய அமைப்பாகும். இந்தச் சங்கம் 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பதிவு செய்யப்பட்டது. முதல் தலைவராக பேராசிரியர் ஜி. சங்கரநாராயணன், முதல் செயலாளராக பேராசிரியர் ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் முதல் கல்வி செயலாளராக பேராசிரியர் ஈ. சம்பத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புதிய கணித இதழின் தேவை ஆழமாக உணரப்பட்டது மற்றும் இதழைத் துவக்கி வளர்க்க ஒரு அமைப்பின் தேவை ஆகியவை சங்கம் உருவாவதற்கான தொடக்க உத்வேகமாக இருந்தது.[1][2]

இராமானுஜன் கணித சங்கம்
உருவாக்கம்1985
தலைமையகம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
President
ரவி எஸ். குல்கர்னி
வலைத்தளம்http://www.ramanujanmathsociety.org/

வெளியீடுகள்

தொகு

இராமானுஜன் கணிதவியல் சங்கத்தின் வெளியீடுகள் பின்வருமாறு:

  • கணித செய்திமடல் மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு இதழ். 1991ஆம் ஆண்டு பேராசிரியர் ஆர். பாலகிருஷ்ணன் தலைமை ஆசிரியராக இருந்தபோது இந்தச் செய்திமடல் தொடங்கப்பட்டது. தற்போது, சென்னை ஐஐடி-யின் பேராசிரியர் எஸ். பொண்ணுசாமி தலைமை ஆசிரியராக உள்ளார்.
  • இராமானுஜன் கணிதச் சங்கத்தின் இதழ் 1986 ஆம் ஆண்டில் பேராசிரியர் கே. எஸ். பத்மநாபன் தலைமை ஆசிரியராக இந்த இதழ் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், இது ஒரு இரு ஆண்டிதழாக இருந்தது. இப்போது ஆண்டுக்கு நான்கு வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன. தற்போதைய தலைமை ஆசிரியர் அமெரிக்காவின் அட்லாண்டா எமோரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர். பரிமளா மற்றும் நிர்வாக ஆசிரியர் மைசூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இ. சம்பத்குமார் ஆவர்.
  • சிறிய கணிதப் பொக்கிஷங்கள் இது கணிதத்தில் தேர்ந்த வாசகர்களுக்கும், மீத்திறன் மாணவர்களுக்கும் உரையாற்றும் புத்தகங்களின் தொடராகக் கருதப்படுகிறது. இந்தத் தொடரின் கீழ் இதுவரை ஒரே ஒரு புத்தகம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் ஷிலேஷ் ஏ ஷிராலியின் "அட்வென்ச்சர்ஸ் இன் இடரேஷன்".
  • கணிதத்தில் ஆர். எம். எஸ்-இன் விரிவுரை குறிப்புகள் தொடர் இது மோனோகிராஃப்கள் மற்றும் மாநாடுகளின் நடவடிக்கைகளைக் கொண்ட ஒரு தொடர்.

நிர்வாகக் குழு

தொகு
தலைவர் மாஸ்டர் சித்தார்த் சோனி, பாஸ்கராச்சாரியா பிரதிஷ்டானா, ஹைதராபாத்.
துணைத் தலைவர் பேராசிரியர் தினேஷ் சிங், துணைவேந்தர், தில்லி பல்கலைக்கழகம்.
உறுப்பினர் பேராசிரியர் மஹுவா தத்தா, இந்திய புள்ளியியல் நிறுவனம், கொல்கத்தா.
கல்விச் செயலாளர் பேராசிரியர் எஸ். குமரேசன், ஹைதராபாத் பல்கலைக்கழகம்.
பொருளாளர் பேராசிரியர் கே. ஸ்ரீநிவாஸ், கணித அறிவியல் நிறுவனம், சென்னை.
புதிய உறுப்பினர் மாஸ்டர் ஆரிய பசுபார்த்தி, பி ஒபுல் டெட்டி, ஹைதராபாத்

மேற்கோள்கள்

தொகு
  1. "Ramanujan Mathematical Society - Home page". பார்க்கப்பட்ட நாள் 20 April 2012.
  2. "The Ramanujan Mathematical Society". University of St Andrews, Scotland. பார்க்கப்பட்ட நாள் 22 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுஜன்_கணித_சங்கம்&oldid=3995470" இலிருந்து மீள்விக்கப்பட்டது