இராமாமிர்த செயராமன்
இராமாமிர்த செயராமன் (Ramamirtha Jayaraman) (10 அக்டோபர் 1937 - 14 ஏப்ரல் 2019 ) என்பவர் இந்திய மரபியலாளர் ஆவார். இவர் பாக்டீரியாவில் குறிப்பாக எஸ்செரிச்சியா கோலியில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.[1] பாக்டீரியாவின் வரிவடிவாக்கத்த்இனை கட்டுப்படுத்துவது குறித்த இவரது ஆய்வுகள், இதில் துணை காரணிகளின் பங்களிப்பு மற்றும் ஆர்.என்.ஏ பாலிமரேசுடனான தொடர்புகளுக்குச் சான்றளிப்பதாக அறியப்படுகிறது.[2] இவர் பேராசிரியராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் [3] மற்றும் விஞ்ஞானியாக டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.[4] ஓய்வு பெற்ற பிறகு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தகைசால் அறிவியலாளராக பணியாற்றினார்.[5] இவர் மூலக்கூறு மரபியலில் ஆய்வக கையேடு ஒன்றினையும்[6] மற்றும் பல துண்டுப்பிரசுரங்களையும்[7] மற்றும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பப்மெட், மருத்துவ ஆவணங்களின் இணைய தரவகத்தில் இவரது ஆய்வுகள் சுமார் 59 பட்டியலிடப்பட்டுள்ளது.[8] அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், உயிரியல் அறிவியல் பிரிவில் 1982ஆம் ஆண்டில், மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசை விருதினை வழங்கியது.[9]
இராமாமிர்த செயராமன் | |
---|---|
பிறப்பு | தமிழ் நாடு, இந்தியா | 10 அக்டோபர் 1937
இறப்பு | 14 ஏப்ரல் 2019 மதுரை, தமிழ் நாடு, இந்தியா | (அகவை 81)
தேசியம் | இந்தியன் |
துறை |
|
பணியிடங்கள் | |
அறியப்படுவது | எஸ்செரிச்சியா கோலி மரபியல் |
விருதுகள் | 1982 சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது |
செயராமன் அவர்கள் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாளன்று காலமானார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ name="Brief Profile of the Awardee">"Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners" (PDF). Council of Scientific and Industrial Research. 1999. p. 31. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ D. P. Burma (2011). From Physiology and Chemistry to Biochemistry. Pearson Education India. pp. 238–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-3220-5.
- ↑ "Letter from Ramamirtha Jayaraman to James D. Watson". Cold Spring Harbor Laboratory. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
- ↑ R. Jayaraman (August 2008). "Joshua Lederberg's legacy to bacterial genetics". Resonance 13 (8): 716–729. doi:10.1007/s12045-008-0079-9.
- ↑ Kunthala Jayaraman, R. Jayaraman (1980). Jayaraman Laboratory Manual in Molecular Genetics. John Wiley & Sons. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0852264294.
- ↑ E.B. Goldberg, R. Jayaraman (1971). Transcription of Bacteriophage T4 Genome In Vivo. Cold Spring Harbor symposia on Quantitative Biology. அமேசான் தர அடையாள எண் B00N182AHY.
- ↑ "Jayaraman R on PubMed". PubMed. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
- ↑ "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
- ↑ M.Hussain Munavar and K.Dharmalingam. 2020. R. Jayaraman (1937–2019). Current Science, 118(3):488-489.