இராம்நாட் இராகவன்

இந்திய இசைக் கலைஞர் (1927-2009)

இராம்நாட் வி. இராகவன் (Ramnad V. Raghavan) (19 ஜூன் 1927 - 21 நவம்பர் 2009) ஓர் மிருதங்கக் கலைஞராவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பி. வைத்தியநாத ஐயர் மற்றும் பிரான்நாயகிக்கு மகனாகப் பிறந்தார். இவரது மூத்த சகோதரர் இராம்நாட் கிருஷ்ணனும் பிரபல கருநாடக இசைக் கலைஞராவார்.

இராம்நாட் வி. இராகவன்
பிறப்புஇராமநாட் வைத்யநாத ராகவன்
(1927-06-19)19 சூன் 1927
மதுரை, தமிழ்நாடு
இறப்பு21 நவம்பர் 2009(2009-11-21) (அகவை 82)
சென்னை, தமிழ்நாடு
பணிமிருதங்கக் கலைஞர்
பெற்றோர்பி. வைத்யநாத ஐயர்,
பிரிகநாயகி

1970 ஆம் ஆண்டு தொடங்கி, அமெரிக்காவின் கனெக்டிகட்டிலுள்ள வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் கற்பித்தார். கிளீவ்லாந்து தியாகராஜர் விழாவை ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர். 2000 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற இவர் பிறகு சென்னை திரும்பினார்.

இறப்பு

தொகு

தனது 82ஆவது வயதில் 2009 நவம்பர் 21 அன்று சென்னையில் காலமானார்.[1] கிளென் வெலெஸ், ஜேமி ஹடாத், டேவிட் நெல்சன், பாட்ரிசியா ஷெஹான் காம்ப்பெல், பிராங்க் பென்னட் மற்றும் ஜோசப் எம். கெட்டர் ஆகியோர் இவரது மாணவர்களில் அடங்குவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Drake, Olivia Bartlett (30 November 2009) "Artist in Residence Raghavan Dies Nov. 51". The Wesleyan Connection. Retrieved 9 February 2010.

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்நாட்_இராகவன்&oldid=4042308" இலிருந்து மீள்விக்கப்பட்டது