த. இரங்கநாதன்
தஞ்சாவூர் இரங்கநாதன் (Tanjore Ranganathan) (13 மார்ச் 1925-22 டிசம்பர் 1987) ஓர் இந்திய -அமெரிக்க கருநாடக இசைக் கலைஞராவார். இவர் தாளக் கருவிகளில், குறிப்பாக மிருதங்கம் வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். பழனி சுப்பிரமணிய பிள்ளையின் கீழ் பயிற்சி பெற்றவர்.[1]
தஞ்சாவூர் இரங்கநாதன் | |
---|---|
இயற்பெயர் | தஞ்சாவூர் இரங்கநாதன் |
பிறப்பு | சென்னை, இந்தியா | 13 மார்ச்சு 1925
இறப்பு | 22 திசம்பர் 1987 மிடில்டவுன், கனெடிகட், அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 62)
அறியப்படுவது | கருநாடக இசை - நூதன முரசு |
உறவினர்கள் | த. விசுவநாதன் (சகோதரர்), தஞ்சாவூர் பாலசரஸ்வதி (சகோதரி) |
இரங்கநாதன் 1938 இல் தொழில் ரீதியாக நிகழ்ச்சிகளை நிகழ்த்த தொடங்கினார். கலிபோர்னியா கலை நிறுவனம் மற்றும் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் ராபர்ட் இ. பிரவுன், ஜான் பெர்கமோ, ஜான் பி. ஹிக்கின்ஸ், டக்ளஸ் நைட், டேவிட் நெல்சன், ராயல் ஹார்டிகன், டேவிட் மோஸ், கிரேக் உட்சன், கிளென் "ரஸ்டி" ஜில்லட் உட்பட இந்தியர்கள் அல்லாத பலருக்கும் கர்நாடக இசையைக் கற்பித்தார். 1963 இல் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கத் தொடங்கினார்.
புல்லாங்குழல் கலைஞரும் மற்றும் பாடகருமான த. விசுவநாதன் (1927-2002) இவரது இளைய சகோதரர் ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து பரதநாட்டியக் கலைஞரும் தங்களது மூத்த சகோதரியுமான பாலசரஸ்வதியைப் பற்றிய சத்யஜித் ராயின் பாலா (1976) என்ற ஆவணத் திரைப்படத்திற்கு இசையமைத்தனர்.
அமெரிக்க இசையமைப்பாளர் ஹென்றி கோவல் தனது மெட்ராஸ் சிம்பொனியில் குறிப்பாக இவருக்காக மிருதங்கப் பகுதியை இயற்றினார்.
இறப்பு
தொகுநீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இரங்கநாதன் தனது 62வது வயதில் காலமானார். இவருக்கு எட்வினா என்ற மனைவியும், சுதாமா மற்றும் அருண் என்ற மகன்களும் இருந்தனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Tanjore Ranganathan, Drummer, 62". த நியூயார்க் டைம்ஸ். 24 December 1987. https://www.nytimes.com/1987/12/24/obituaries/tanjore-ranganathan-drummer-62.html. பார்த்த நாள்: 17 March 2014.
வெளி இணைப்புகள்
தொகு- T. Ranganathan page by David Nelson
- Obituary from The New York Times