இராம் நரேசு இராம்

இந்திய அரசியல்வாதி

இராம் நரேசு இராம் (Ram Naresh Ram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1924 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பரசுச்சி என்று பிரபலமாகவும் அறியப்பட்டார். 1995 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பீகார் அரசியலில் இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை கட்சியின் சார்பாக செயல்பட்டார். இக்கட்சியின் வேட்பாளராக சகார் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்..[1][2][3][4]

இராம் நரேசு இராம்
Ram Naresh Ram
சட்டமன்ற உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை
பதவியில்
1995–2010
தொகுதிசாகர், பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-08-16)ஆகத்து 16, 1924
சாகர், பீகார்
இறப்புஅக்டோபர் 26, 2010(2010-10-26) (அகவை 86)
பட்னா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
வாழிடம்(s)சாகர், பீகார்
வேலைஅரசியல்வாதி
சமூகப்பணி

இராம் நரேசு இராம் 1951 ஆம் ஆண்டில் இந்திய பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். பிரிவிற்குப் பிறகு அவர் பொதுவுடமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவில் சேர்ந்தார். 1967 ஆம் ஆண்டில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். எக்வாரி பகுதியில் நக்சல் இயக்கத்தில் பங்கேற்றார், மேலும் சுப்ரதா தத்தா மற்றும் பிறருடன் இணைந்து 1970 போச்பூர் எழுச்சியின் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "RAM NARESH RAM (CPI(ML)(L)):Constituency- Sahar (Bhojpur ) - Affidavit Information of Candidate". myneta.info.
  2. "The first generation Dalit naxalite leader of Bhojpur Ram Naresh Ram alias Parasji is not likely to contest this time due to his prolonged illness, according to party sources.CPI-ML leader Ram, himself one of the pillars of Ekbari's Naxal movement, has already made a hat-trick in the erstwhile reserved Dalit constituency of Sahar in Bhojpur district. Octagenarian leader is currently on pacemaker. - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  3. "🗳️ Ram Naresh Ram winner in Sahar, Bihar Assembly Elections 2000: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". LatestLY (in ஆங்கிலம்).
  4. Singh, Santosh (2015-10-09) (in en). Ruled or Misruled: Story and Destiny of Bihar. Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-85436-42-0. https://books.google.com/books?id=SVu8CgAAQBAJ&dq=Ram+Naresh+Ram+Naxal&pg=PT180. 
  5. "Comrade Ram Naresh Ram". archive.cpiml.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_நரேசு_இராம்&oldid=3843906" இலிருந்து மீள்விக்கப்பட்டது