இராம் பகதூர் லிம்பூ
இராம் பகதூர் லிம்பூ (Ram Bahadur Limboo) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்கிம் சனநாயக முன்னணியின் உறுப்பினராக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் சோரெங்-சகுங்கு தொகுதியிலிருந்து சிக்கிம் சட்டமன்றத்திற்குத் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
இராம் பகதூர் லிம்பூ Ram Bahadur Limboo | |
---|---|
சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2014–2019 | |
பின்னவர் | ஆதித்யா தமாங்கு |
தொகுதி | சோரெங்கு-சகுங்கு சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ராம் பகதூர் லிம்பூ 1953/1954 (அகவை 70–71)[1] |
அரசியல் கட்சி | சிக்கிம் சனநாயக முன்னணி |
வாழிடம்(s) | சோரெங்கு, மேற்கு சிக்கிம் மாவட்டம் |
முன்னாள் கல்லூரி | வடக்கு வங்காள பல்கலைக்கழகம் (இளங்கலை, இளங்கலைச் சட்டம்) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇராம் பகதூர் லிம்பூ, சிக்கிமின் மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள சோரெங்கைச் சேர்ந்த ஏமா கர்ணா லிம்பூவுக்கு மகனாகப் பிறந்தார். 1983 ஆம் ஆண்டில் வடக்கு வங்காளப் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டப் பாடங்களில் பட்டங்களைப் பெற்றார் [1]
அரசியல் வாழ்க்கை
தொகு2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் சிக்கிம் சனநாயக முன்னணியின் உறுப்பினராக சோரெங்-சகுங்கு தொகுதியில் இருந்து இராம் பகதூர் லிம்பூ 6,596 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார், இது மொத்த வாக்கு சதவீதத்தில் 56.5% ஆகும். [1] [2] இத்தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவின் பாரதி சர்மாவை 1,929 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [2]