இராம. மா. வாசகம்

இராம. மா. வாசகம் (R. M. Vasagam) (இராமசாமி மாணிக்க வாசகம்[1][2][3] என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மூத்த விண்வெளி விஞ்ஞானி மற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணை வாகனங்கள் உள்ளிட்ட விண்வெளி அமைப்புகளின் நிபுணர் ஆவார்.[4] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த இவரது பணியின் போது, ஆப்பிள் - இந்தியாவின் முதல் உள்நாட்டு புவிசார் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் திட்டத்திற்கான திட்ட இயக்குநர் செயல்பட்டார். பின்னர் இஸ்ரோ தலைமையகத்தில் மேம்பட்ட தொழில்நுட்ப மற்றும் திட்டமிடல் இயக்குநர் பொறுப்பினை வகித்தார்.[5] இதற்குப் பின்னர் சென்னை,அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இப்பணி ஒய்விற்குப் பின் இவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிபராக பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் 1963ல் பொறியியற் பட்டம் பெற்ற பிறகு, 1965 ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்ப தொழில்நுட்ப கழகம், சென்னையில் மின் பொறியியலில் முதுகலைப் பொறியியல் பயின்றார்.[5]

தொழில்

தொகு

1965ஆம் ஆண்டில் வாசகம் இந்தியாவின் விண்வெளி திட்டத்தில் சேர்ந்தார். அப்பொழுது இந்நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்தியத் தேசிய குழுவாக இருந்தது. பின்னர் இது இஸ்ரோ செயல்பட்டபோது, செயற்கைக்கோள் ஏவுதல், திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டுக் குழு, கட்டுப்பாட்டு அமைப்புகள், செயற்கைக்கோள் மையம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட பல செயல்பாட்டுப் பிரிவுகளில் பணியாற்றினார். 1977-1983 காலப்பகுதியில் இந்தியாவின் முதல் உள்நாட்டு புவிசார் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் திட்டமான ஆப்பிள் திட்ட இயக்குநராக இருந்தார்.[6] 1994ஆம் ஆண்டில், வாசகம் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தின், மேம்பட்ட தொழில்நுட்ப மற்றும் திட்டமிடல் இயக்குநகரத்தின் பொறுப்பினை ஏற்றார்.

1996 முதல் 1999 வரை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தார். பின்னர் சென்னை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராகவும் (ஜூன் 1999 - அக்டோபர் 2001), கோவையில் காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தில் இயக்குநராகவும் (ஐ.டி) பணியாற்றினார். டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் துணைவேந்தரா ஜூன், 2003 முதல் ஏப்ரல், 2006 வரையும்) மற்றும் சார்பு-அதிபராக ஏப்ரல் 2006 முதல் செப்டம்பர் 2008 வரை பதவி வகித்தார். வாசகம் தற்போது டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகம் வேந்தராகப் பதவி வகிக்கின்றார்.

விண்வெளி அமைப்புகளில் தன்னம்பிக்கை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனங்கள் மற்றும் சேவை செயற்கைக்கோள்கள் ஆகியவற்றில் இவர் ஆர்வமுடையவர்.

விருதுகள்

தொகு

அரி ஓம் ஆசிரமம் ப்ரீத்தி விக்ரம் சாரபாய் ஆராய்ச்சி விருது, 1981,[7] பி.ஆர்.எல். விண்வெளித் துறை, இந்திய அரசு

பத்மசிறீ, 1982 இந்திய அரசு[2]

பன்னாட்டு மின், மின்னணு பொறியியல் சமூக நூற்றாண்டு பதக்கம், பெங்களூர் பிரிவு, 1984[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Prof. R M Vasagam – 40yrs IEEE Bangalore Section" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
  2. 2.0 2.1 "Padma Awards | Interactive Dashboard". www.dashboard-padmaawards.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2021-06-28. பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
  3. "Indian First Communication Satellite – APPLE - ISRO" (PDF). www.isro.gov.in. Archived from the original (PDF) on 2021-04-24. பார்க்கப்பட்ட நாள் 2020-08-03.
  4. "Indian First Communication Satellite – APPLE - ISRO" (PDF). www.isro.gov.in. Archived from the original (PDF) on 2021-04-24. பார்க்கப்பட்ட நாள் 2020-08-03.
  5. 5.0 5.1 "Office of Alumni & Corporate Relations". alumni.iitm.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-03.
  6. "BRIEF BIODATA OF PADMASHRI Prof. R.M. VASAGAM" (PDF). BIT MESRA. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
  7. "Hari Om Ashram Prerit Vikram Sarabhai Research Award Awardees List". India: Physical Research Laboratory. பார்க்கப்பட்ட நாள் 23 August 2020.
  8. Zia Ahmed, ed. (September 2008). "List of 1984 Centennial Medal Recipients in Region 10" (PDF). p. 39. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம._மா._வாசகம்&oldid=3593437" இலிருந்து மீள்விக்கப்பட்டது