இராய்ரங்பூர் விமான ஓடுதளம்
இராய்ரங்பூர் விமான ஓடுதளம் (Rairangpur Airstrip) இந்தியாவின் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டம் இராய்ரங்புர் நகர மையத்திற்கு 6 கிலோமீட்டர் அப்பால் அமைந்துள்ளது. தண்டுபோசு விமான ஓடுதளம் என்றும் அழைக்கப்படுகிறது.[1][2] இராய்ரங்பூர் விமான ஓடுபாதை 61 ஏக்கர் பரப்பளவில் ஒடிசா அரசின் பணிகள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஓடுபாதை 750 மீட்டர் (சுமார் 3280 அடி) நீளம் கொண்டுள்ளது. மாநில அரசால் பராமரிக்கப்படுகிறது.[3][4]
இராய்ரங்பூர் விமான ஓடுதளம் Rairangpur Airstrip | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||
இயக்குனர் | ஒடிசா அரசு | ||||||||||
அமைவிடம் | இராய்ரங்பூர், ஒடிசா, இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 853 ft / 260 m | ||||||||||
ஆள்கூறுகள் | 22°18′18″N 86°08′07″E / 22.30500°N 86.13528°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
தற்போது, இந்த விமான நிலையத்திற்குச் செல்வதற்கும் போவதற்கும் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் எதுவும் இல்லை. அருகிலுள்ள விமான நிலையம் சார்க்கண்டின் சாம்செட்பூரில் உள்ள சோனாரி விமான நிலையமாகும். இது இராய்ரங்புர் விமான நிலையத்திலிருந்து 71 கி. மீ தொலைவில் உள்ளது. ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேசுவரில் உள்ள பிச்சூ பட்நாயக் சர்வதேச விமான நிலையம் இராய்ரங்பூர் விமான ஓடுதளத்திலிருந்து கிட்டத்தட்ட 275 கி. மீ. தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Airstrip in the State maintained by State Government" (PDF). ct.odisha.gov.in. Commerce and Transport Department, Government of Odisha. Archived from the original (PDF) on 14 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 14 January 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "AAI Unserved Airports" (PDF). aai.aero. Airports Authority of India.
- ↑ "Rairangpur Airport - Rairangpur, Odisha" (PDF). Airport Authority of India. Archived from the original (PDF) on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 30 April 2018.
- ↑ "Rairangpur Airport". aai.aero.