இராவ் ரெமலா

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி மென்பொருள் உருவாக்குநர்

இராவ் ரெமலா (Rao Remala) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் உருவாக்குநர் ஆவார், தற்போது இவர் ஏஞ்சல் என்ற நிறுவனத்தின் பெயரில் முதலீட்டாளராகவும் கொடையாளியாகவும் இயங்குகிறார்.[1] 1981 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக அழைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.[2] மைக்ரோசாப்ட் விண்டோசு மென்பொருளின் முதல் பதிப்பு முன்னணி மென்பொருள் உருவாக்குநர்களில் இராவ் ரெமலாவும் ஒருவர் ஆவார். வாரங்கல் தேசிய அறிவியல் நிறுவனத்தில் மின் பொறியியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு இவர் எச்.சி.எல் நிறுவனத்தில் பணி புரிந்தார்.[3][4]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இராவ் ரெமலா இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கிருட்டிணா மாவட்டத்தின் நாகயலங்கா மண்டலம், டி. கொத்தபாலம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.[5] வாரங்கல் தேசிய அறிவியல் நிறுவபனத்தில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டமும், கான்பூர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Rao V. Remala Executive profile & Biography - Business week". bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
  2. LIFS. "Rao Remala Microsoft's First Indian Hire". littleindia.com. Little India. Archived from the original on 2019-12-09. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
  3. Manes, Stephen; Paul Andrews (1994). Gates: how Microsoft's mogul reinvented an industry and made himself the richest man in America. Simon & Schuster. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-671-88074-3.
  4. Allan, Roy A. (2001). A history of the personal computer: the people and the technology. Allan Publishing. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9689108-0-1.
  5. Chidanand, Rajghattal. "Dil da maamla or Bill da maamla? Part II". timesofindia.indiatimes.com. TNN. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவ்_ரெமலா&oldid=3582938" இலிருந்து மீள்விக்கப்பட்டது